பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68வல்லிக்கண்ணன்

 பார்வை பார்த்துவிட்டுத் வீடு திரும்பினார். உரிய நேரத்தில், வயிறு புடைக்கத் தின்றார். அருமையான அரிசிச் சாதம், காய்கறி, பருப்பு, நெய், தயிர் எதற்கும் குறை வில்லை. 'உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு': என்கிறார்களே; முதலாளிக்கு இல்லாமல் போகுமா? ஒய்வு பெறுவதற்காகச் சாய்ந்தார் அவர்.

சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்தபடி உழைத்தவர்கள் உரிய நேரத்தில் கஞ்சி குடித்தார்கள். துணைக்கு வெறும் உப்பும், கடித்துக் கொள்ள இரண்டு மிளகாயும் இருந்தன. சிறிது பொழுது நிழலில் இருந்து விட்டு, மீண்டும் உழைக்கலானார்கள்.

அவர்களுடைய உழைப்பின் அளவுபோல் களத்தில் நெல் அம்பாரமாகக் குவிந்தது. எவ்வளவு குவிந்தால் தான் என்ன? முதலாளி வீட்டுக் களஞ்சியம் நிறையுமே தவிர, உழைத்தவர்களின் வயிறா நிரம்பப் போகிறது? அதனால் அவர்களுடைய மனம் மகிழ்வால் நிறையவில்லை.

நெல்லை அளந்து சாக்குகளில் கொட்டும் வேளையில் முதலாளி வந்து சேர்ந்தார். 'கோயில் மான்யம்! 'காவல் சுதந்திரம்' அது - இது என்று சிறிது பங்கு செலவு செய்யப்பட்டது. 'வீட்டிலே சாப்பாட்டுக்கு எதுவும் இல்லை. இரண்டு மூட்டை நெல் கொடுங்க சாமி என்று குடியானவன் ஒருவன் கெஞ்சினான். அழமாட்டாத குறையாகக் கெஞ்சினான். 'உழைத்துக் கழித்து விடுகிறேன், எசமான். ஆபத்துச் சமயத்துக்கு உதவுங்க! என்று கும்பிட்டான்.

ஊகும் முதலாளியின் மனம் இளகிவிடுமா என்ன? 'இந்தப் பயல்களே இப்படித்தான். காலை, கையைப் பிடிப்பானுக. ஐயோ பாவமின்னு இரக்கம் காட்டி விட்டோமோ; அவ்வளவுதான். அப்புறம் நம்ம