பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோழி நல்ல தோழிதான்79


பற்றியிருந்தன. அவன் மனம் வீணான எண்ணங்களில் சஞ்சரித்தது.

"முன்பு, ஜம்புலிங்கம் இந்த மலைக் காடுகளில் வசித்து வந்தான்; எப்பவாவது கீழே போய் ஊர்களில் கொள்ளை அடித்துவிட்டு, மறுபடியும் இங்கே வந்து விடுவான். மேற்கு மலைக்காடுகள் அவனுக்கு வீடு மாதிரி!" என்று சிலர் சொல்லக் கேள்வியுற்றிருந்தான். ஒரு வைத்தியர் மூலிகைகளைத் தேடி மலைமீது அலைவார். கரடி, கடுவாய் போன்ற மிருகங்களை அவர் கண்டிருக்கிறார்; பெரிய பாம்புகளையும் பார்த்திருக்கிறார். அவர் மூலம் அவன் கதை கதையாய்க் கேட்பதுண்டு.

அவர்கள் எல்லாம் பயம் கொள்ளாமல் எப்படித் தான் பொழுது போக்கினார்களோ? இதை நினைக்கவும் அவனுக்கு அவனது பலவீனத்தின்மீது அவன் மீதோ வெறுப்பும் வருத்தமும் ஏற்பட்டது. இப்படியா பயந்து நடுங்கிக் கொண்டிருப்பான் மனுஷன்? இவ்வளவுக்கும் நான் வெட்ட வெளியில் இருக்கவில்லையே. பாதுகாப்பான ஒரு கட்டிடத்துக்குள்தானே இருக்கிறேன்!” என்று நினைக்கவும் அவனுக்கு அவனுடைய தோழைத்தனம் பற்றி வெட்கமும் தன்மீது ஒரு பரிதாப உணர்வும் எழுந்தன.

"கட்டிடம் என்றால்தான் என்ன? பெரிய பாம்பு ஒன்று இங்கே வந்துவிட்டால், நான் என்ன செய்ய முடியும்?" இந்த எண்ணம் எழவும் அவன் உடல் சிலிர்த்தது. அவன் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தான்.

அப்போது மெய்யாகவே அவனை நடுங்க வைக்கும் ஒரு காட்சி பார்வையைக் கவர்ந்தது.

ஒரு பாதைமீதிருந்த நெருப்புப் பந்து ஒன்று ஒரு பள்ளத்தில் பாய்ந்தது. அங்கே குதித்தவாறு, ஓடி