பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80வல்லிக்கண்ணன்


வந்தது. அது என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியாதவனாய் அவன் கொள்ளிவாய்ப் பிசாசு என்பது இதுவாகத்தான் இருக்குமோ?" என்று திகைத்தான் அதையே நோக்கியவாறு இருந்தான்.

நெருப்புப் பந்து சிறிது நேரம் பார்வையில் படாதிருந்து, பிறகு அவன் இருந்த கோயிலின் பக்கமாகவே ஒடி வந்தது. நெருப்புத் தூண்போல் பட்டது. காற்றினாலும் ஓடி வரும் வேகத்தாலும் தீ திகுதிகுவென எரிந்தது அது என்ன?

இராமலிங்கத்தின் உள்ளம் பதைபதைப்புற்றது. பயம் அவனைக் கல்வி உலுக்கி உதறியது.

அவனது பீதியை அதிகரிக்கும் விதத்திலே, நகர்ந்து வந்த தீக்கோளத்திலிருந்து அமானுஷ்யமான, மிகவும் கோரமான, வேதனை மிகுந்த கதறல் தொடர்ந்து கொண்டிருந்தது. துயரத்தினால் அலறும் சத்தம்போலும், சகிக்கமுடியாத வேதனை தூண்டிவிட்ட மிருக அலறல் போலும், தெளிவற்ற ஊமைக் குரலாக எழுத்த அக்கூப்பாடு மலைமீது படிந்து தொங்கிய அமைதியைக் குத்திக் குதறிக் கோரமாய் நீண்டு எதிரொலி கிளப்பியது அந்தக் கூச்சலும் பயங்கரமான தீப் பிழம்பும் கோவிலை நோக்கியே வந்தன.

ராமலிங்கத்தின் உடல் வெடவெடத்தது. அவன் பயந்து நடுங்கினான். அவனுடைய அச்சம் தெளிவற்ற ஓலமாய் பீறிட்டது.அவன் கத்தியவாறு கண்களை மூட நெருப்புப் பந்தம் என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும் என்று உந்துதலினால் அடிக்கடி கண்கள் திறந்து விழித்தன.

அப்போது, அந்தத் தீயின் மத்தியிலே ஒரு முகம் தோன்றியது. மிருக முகம் போல் தெரிந்தது. அதன்