பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 25

"நீங்கள். பேசற பாஷையே வேறேயா இருக்கு. போனவர்கள் போய் விட்டாலும் இருக்கிறவா சுபிக்ஷமா யிருக்கணும்னு, லோக rேமார்த்தம் இந்தக் காரியங் களைச் செய்தாகணும் இதுகளைச் செய்யாட்டா பிதுர்க்களின் சாப்ம் குடும்பத்திற்கு சம்பவிக்கும்.'

'சாஸ்திரிகளே, உங்கள் கேள்விக்குப் பதில் உங்க வரிடமிருந்தே வந்து கொண்டிருக்கிறது. போனவர், இருப்பவர், rேமம், சாபம், லோகம் ஈதெல்லாம் சமுதாய பாஷையின்றி வேறு என்ன? உங்கள்வரை நேற்று இருந்த என் தாய் இன்று போய்விட்டாள் அல்லவா? ஆனால் அதோ சாம்பல் படுக்கையிலிருந்து நம் சர்ச்சையைக் கேட்டு அவள் சிரிக்கும் சிரிப்பின் த்வனி எனக்குக் கேட்கிறது. உங்களுக்குக் கேட்கிறதோ? அது தான் நான் உங்களுக்குச் சொல்லத் தவிக்கும் விஷயம்." "இதோ பாருங்கள், பூணுரலைக் காணோம்னா அதற்குப் பரிகாரம் இருக்கு. பெரியவா எல்லாத்துக்குமே பரிகாரம் பிராயசித்தம் ஏற்படுத்திட்டுப் போயிருக்கா. அதனாலே -

ஆண்டவன் சித்தத்துக்கே ப்ராயச்சித்தம் உண்டா «т $1 &T ?”” -

சாஸ்திரிகளின் கீழுதடு கேலி நகையில் வளைந்தது. 'நீங்கள் என்ன அப்போ சாமியாராயிட்டேளா? இப்படியே இந்த இடுப்பு வேட்டியுடனும் தோள் முண்டுடனும் தேசாந்தரம் கிளம்பிட்டே ளா? வீட்டுக்குக் கூடத் திரும்பப் போறதில்லையா? இந்த நிலைக்குக்கூடப் பெரியவா ஏற்கனவே பேர் வெச்சிருக்கா, ஸ்சமான வைராக்யம்னு-”

'எனக்கு ஏற்பட்டிருக்கும் விடுதலை வைராக்கியத் திலிருந்துகூடத்தான்.”

வாத்தியார் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். வாத்தியாருக்கு சொந்தத்தில் இரண்டு மாடி வீடுகள் இருக்கின்றன. வாடகை வருகிறது. அவர்