பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு (?) பசாரம் (!) 碧丞

கொடுத்த ஐயம'ன்னு ஒரு பேர் உண்டாமே! யாரோ பிறவி மூளைக் கோளாறு ஒருத்தி ஆடையைக் காவாலிக் கூட்டம் ஒண்னு உரிச்சு சிரிச்சப்போ, ஐயா உள்ளே புகுந்து தன் வேட்டியை அவிழ்த்து அவள் மேலே சுத்தி, அத்தனை பேரையும் வெறுங்கையாலேயே நச்சு நச்சென நச்சி ஒடவெச்சாராமே! ஈதெல்லாம் என்ன சாமானியமா' ஆனால் அது என்னவோ தெரியல்லே என்னை மட்டும் ஏன் செத்த பாம்பாப் பார்த்துட்டார் ?

செத்த பாம்புன்னு சொல்றோம். ஆனால் அது லேசாப்படலே எனக்கு ஏன்னு கேளுங்க. என் அப்பா ஒரு தரம் பாம்பு அடிச்சுப் பார்த்தேன். பாம்புக்கோ கண் இமைக்கறதுமில்லே. மூடறதுமில்லேன்னு உங்களுக்குத் தெரியாததில்லே. அடிமேல் அடி விழ, அந்தக் கண்ணுலே வலி, திகைப்பு, அப்புறம் துயரம். இது எல்லாத்தோட, எல்லாத்தையும் தாண்டி ஒரு கேலி, பாரு நான் செத்தாலும் முழிச்சிண்டிருக்கேன். இதெல்லாம் என் நெனப்புத்தான்னாலும் என் வரைக்கும் அது உண்டு தானே! -

நான் வந்த புதுசில் ஊர் வளமாய் இருந்தப்போ, மலிவா கிடைக்கிறப்போ-நெல் பிடிச்சு (அது என்ன மலிவோ இன்றைக்கு நேற்று மலிவு என்கிற கணக்கில்) என் வீட்டில் எலி வேட்டை ஆட முடியாமல் இவரிடம் ஒப்படைச்சிருந்தேன். நான் வந்த ராசி, வானமும் வேளை கெட்டது. வயலும் காய்ச்சல் கண்டது. ஏழை, வயிறு கழுவதாலியை அடகு வைக்கிறான். எங்கள் அரிசி டின்னும் காலி ஆயிட்டுது.

"ஐயா வாச்மேன், நெல்லை அரைச்சுக் கொண் டாங்க” கொண்டு வந்தார். நெல்லுக்கும் திரிச்சு வந்த அரிசிக்கும் அளவு, அளவுமீறிக் குறையுது. எனக்குத் திகைப்பு. என் சம்சாரத்துக்கு அங்கலாய்ப்பு வாச்மேன் ஐயாவுக்கு லேசான புன்சிரிப்பு: நான்தான் ஏற்கெனவே அதில் மயங்கிக் கிடக்கேனே. நான்தான். இப்போ