பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 & லா. ச. ராமாமிருதம்

பிடித்துக் கொடுக்க எனக்குத் தலைமறைவாய் அவர் ஒரு கிளை ஆபீஸ் நடத்தறார். என் கையில் ரிஜிஸ்டரை அவரேதான் கொண்டு வந்து கொடுப்பார். இதுபோல் காத்தனாருக்குத் தனி சர்வீஸ் செய்து அவர் தலையில் எத்தனை காப்பி, எத்தனை நெய்க் கடலை, அல்லாத் துண்டுகூட அரைத்திருக்குமென்று எனக்கு தெரியாதென்று அவர் நினைத்திருக்கிறார். சிரிக்கிறீங்க. அவர் தலையை அரைச்சவங்களும் சேந்து சிரிக்கிறீங்க, சிரியுங்க, சிரிக்காமல் என்ன செய்வது ?

'காத்தய்யா எங்கே : இப்பக் குரல் கொடுத்தாரே ?” ஸ்டேட் பாங்க் போயிருக்காருன்னு பதில் கிடைக்கும்.

நான் அப்படி நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு நாள் எங்கேயோ நான் ஆபீஸ் வேளையில், ஆபீஸ் ஜோலியாய் வெளியே போய் வருகையில், காத்தனார் அவரது தென்னங்கொல்லையில் கமலை ஏத்தம் இறைத் துக் கொண்டிருக்கிறார். காக்கி யூனிபாரம் ஒரு தென்னை மட்டையில் தொங்குது. எனக்குக் கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வந்தது. வரலாமா ? அது என் தப்புதான், கோபம் என்னுடையதுதானே ஆபீசுக்கு வரலாம் : மணியை எட்டுத்தரம் அடிக்கலாம். அவன் எங்கே எங்கே’ என்று எரிந்து விழலாம். வந்தவுடன் ஒரு மெமோ கொடுக்கலாம். அவ்வளவு தானே : மகன்’ கிணுங்கினால்தானே !! வாங்கிக்கொண்டு, ஐயா நான் உங்க மகன் மாதிரி ; மெமோ வில் என்ன கேட்டுருக்கீய, படிச்சு காட்டுஹ. பதிலையும் நீங்களே எழுதிக் கொடுங்க."

காத்தனார் அப்பளக் குடுமியிலிருந்து இங்கே உத்யோ கத்துக்கு வந்துவிட்டார். அன்னியிலேந்து அவர் நடத் தும் அமுலை நேத்து வந்த நான் மாத்த முடியுமா ? மாத்த ஆசைப்படலாமாங்கறதே இப்பத்தானே தெரியுது: மத்தபடி அவரைப்போல் பண்பும் இங்கிதமும் தெரிந்தவர் இங்கேயாரும் இல்லை என்றே நான் சொல்லுவேன்.