பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {}{} லா. ச. ராமாமிருதம்

பிள்ளைவாள், துவர்ப்பும், கசப்பும், எவ்வளவு கிட்டக் கிட்ட பாத்தையளா? அப்போ எங்கே தெரியுது. எல்லாம் முறையாகத்தான் செஞ்சோம். அப்பப்போ வெச்சர் நீங்கள் செலவுக்கு காட்டினிய, நானும் குல்படி கட்டம் கட்டமாத்தான் பட்டுவாடா பண்ணினேன். ஆனால் கிணத்து வேலையை நான் அப்பப்போ வந்து கவனிக்கல்லே. என்னோட பல ஜோலி திருகு வலியிலே எட்டு மைல் வந்து வந்து எப்படிப் பாக்க நம்பிக்கை யிலும், குன்சு'லேயும் தானே பாதி காரியம் பாத்துக்கிட்டு போகவேண்டியிருக்கு. ஆனால் ஆறு மாதம் பொறுத்து எனக்கு என்னவோ இடது கன்னம் பளிச் பளிச்சுன்னு துடிக்குது. கெட்டியாப் பிடிச்சுக்கறேன். பிடிக்கு அடியில்ே வெடுக்குன்னு உதறுது. அது அது தன் துட்பத்தைக் காண்பிக்குது. என்ன செய்ய? காரைப் போட்டுக்கிட்டு வந்தேன். செவ்விள நீர் வரவழைக் கிறீங்க. சீவlங்க. பொக்கறிங்க. இரண்டு கையாலும் ஏந்திக் கொடுக்கறீங்க. ஆனால் கிணத்தைப்பத்தி பேச மாட்டீங்கநீங்க. அதுக்காக என் கன்னம் என்னை விடுதா? காரிலேயே வயல்காட்டுக்குப் போனோம்

ஆனா நீங்க மொதமொதல்லே தோண்டப் போறதா சொன்ன இடத்துலே கிணத்தைக் காணோம். கண்ணைக் கசக்கறேன். கிணத்தைக் காணோம். எனக்கு வயத்துலே புளியைக் கரைச்சுது. அலாவுதீன் அற்புததீபம் துர்க்கிப் போயிடுச்சா? அதுதான் சம்சாரி, என் பாவம் பாத்துத் திரும்பக் கொண்டு வந்து வைக்கனும், காவிப்பல்லை நீங்க அப்போ செக்கச்செவேல்னு என்னவா காண்பிச் சிங்க?

சாமி, கடன் வாங்கின பணத்தை நான் கையாடி உல்லே ஏற்கெனவே இன்னொரு கிணத்தை ஆழப்படுத் தவும், அகலப்படுத்தவும் அதுலே போட்டிருக்கேன். எதுலே போட்டா என்ன? அந்தக் கிணறு இந்த அஞ்சு வருடத்திலே ஒரு லட்ச ருவாயை முளுங்கியிருக்கு,