பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு (?) பசாரம் (!) i 0 f

'பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு பைராகி சொல் விட்டுப் போன வார்த்தையை இன்னும் நம்பிக்கிட்டு இருக்கேன். 'டே கந்தப்பா, உன் கிணத்துலே புதையல் இருக்கு. ஆனால் அதை நான் உனக்குக் காட்டப் போவ தில்லை. உறையைச் சுத்தி ஏதோ ஒரு ஊசி முனையில் உன் கடப்பாறை படக் காத்திருக்குடா ஒரு ஊத்து, அதைத் தட்டினதும் உன் குடும்பத்துக்கு இன்னும் எட்டு தலைமுறைக்கு பாலாய்த்தான் பொங்கப் போவுது. அதைக் கண்டுபிடி கண்டுபிடி!! கண்டுபிடி!!! கடவுளா யிருந்தால் அவரே உனக்குக் காட்டிக் கொடுப்பார். ஆனால் நாங்கள் கடவுளின் துர்துவர்கள். நாங்கள் கை காட்டியாய்த்தான் நிக்க முடியும் உங்களுக்கு முன்னால் எங்க கண்ணுக்குத் தெரிஞ்சாலும், எங்களுக்கு இஷ்டமா யிருந்தாலும் தண்ணியும் உபயோகமில்லை; புதையலும் பிரயோஜனமில்லை. அதனால் நீயே கண்டுபிடி கண்டு பிடி!! கண்டுபிடி!!!

'அவர் ஆவேசத்தை என்னில் பொறி வெச்சுட்டுப் போயிட்டாரு. அன்னிலிருந்து கிணத்துக்கும் பசி தீரல்லே. எனக்கும் வேளை வரல்லே. ஆனால் சாமி, இந்தத் தடவை மிளகாய் ஒழுங்கா காச்சால்குவிண்டால் ஆயிரத்து ஐநூறு தெரியுமில்லே? பாங்க் கடனைப் பத்து தடவை திருப்பலாம்.”

நெறி தவறி நடக்கறவங்களுக்குத்தான் மனசையும் சு ரு க் க ச ம | த | ன பண்ணிக்கவும் மு. டி. யு. து . நான்தான் கொட்டு கொட்டுன் னு, ராவு இல்லே பகல் இல்லே தப்புப் பண்ணினவன் மாதிரி, மேட்டைப் பாத்து முழிச்சுக்கிட்டு கிடக்கேன்.

சாமி ஊருக்கு வந்த புதுசிலே முருகன் கோயிலுக்கு விடற துள்ளுக்குட்டியாட்டம்- என்ன சதைப்பிடிப்பா, துடிப்பா, மேனி தக்காளியாட்டம் தகதகன்னு இருப்பார். இங்கு வந்து உடம்பு உடைஞ்சே போயிட்டாரே !” ஏன்யா உடையாது, இந்த மாதிரி கரடியை நாலு