பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தரிசனி

மூளை முடிச்சிலிருந்து கால் கட்டை விரல்வரை பின்னிய நரம்புக் கோலத்தில் வால் நrத்ரம் சீறி யெழுந்து, பிரிக்குப் பிரி எரித்தபடி மண்டைக்கேறி புருவ மத்தியில் வெடித்தது.

இது என்ன என் பூகம்பமா ? மண்டையின் உள் கவானில் பல்லாயிரம் பொறிகள், பல்லாயிரம் வர்ணங்களில் அவன் மேல் குடையிறங்கின. தகதகப்பில் கண் இருண்டது. நினைவு தன் ஊன்றல் அற்றுப் போய், அந்தரத்தின் இன்ட பயங்கரத்தில் தத்தளிப்பு தாங்காது, "இதோ போனேன். இதோ இதோ இதோ, எனத்தானும் தப்பிக் கொண்டிருக்கையில் மேல் கவிந்த நகrத்ரக்குடையின் நெருப்புச் சரங்களிலிருந்து அமுத தாரைகள் சொரிந்து வெள்ளம் வீங்கி, நினைவைத் தன்னோடு அடித்துச் சென்றுவிட்டது.

இது என்ன காலம் அவிந்ததா ? என் கண் அவிந்ததா ? இந்த இருள் என் பிரமையா? அல்ல இதுதான் உண்மையா ? இப்போது உலக உற்பவமா ? அல்ல அதற்கும் முன் அதையும் தன்னுள் அடக்கிய கர்ப்பமா ? பூமி என்னைத்தாங்கிய தருணமே தகர்ந்து இது என்

ப்ரளயமா ? பாம்புப் படம் போல் அலைகள் மீண்டும் மீண்டும் தலை தூக்கிச் சீறியெழுந்து விசிறி ஆடிக் குலைந்து, அவன் மேல் சரிந்தன. இதென்ன அனலுக்கு