பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 லா, ச. ராமாமிருதம்

பையன் நல்ல உத்யோகத்திலிருக்கிறான். ஆனால் அவர் பையனை நம்பவில்லை.

'இன்னிக்கு ஒரு nமந்த முகூர்த்தத்துக்குப் போயா கணும். இன்னும் எத்தனை நாழி இடக்குப் பண்ணப் போறேள்? உங்களை மாதிரி மனுஷாள் இருக்கிறதால் தான் நம் குலம் இப்படி rணப்பட்டிருக்கு. வேலியே பயிரை மேய்ஞ்சால் விமோசனம் இருக்கோ? நீங்களே சொல்லுங்கோ.”

நான் ஒன்றும் சொல்லவில்லை. சொல்ல என்ன இருக்கிறது? அவரும், அவரை அண்டி வந்தவரும், என்னோடு வந்தவரும் என்னைச் சுற்றி நின்றுகொண்டு என்னை ஒரு வினோதப் பிராணிபோல் பார்த்துக் கொண்டிருந்தனர். -

சற்று எட்ட, ஒாக புதை மேட்டின்மேல், புல் மெத்தை யில் ஒரு தாய் நாய் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருந்தது. இரு குட்டிகள்-ஒன்று உடலே பட்டுக் கறுப்பு; இன் னொன்று காது மடிகளில் மாத்திரம் கறுப்புத்திட்டுஇன்ப முனகல்களுடன் பாலுண்டு கொண்டிருந்தன.

ஆடு ஒன்று அருகே புல்லை மேய்ந்துகொண்டிருந்தது. நாய் குரைக்கவில்லை. ஆட்டின்மேல் பாயவில்லை. நாயும் ஆடும் சினேகம் போலும். எத்தனை நாள் சினேகமோ?

அழுகிறேன்

சிரிக்கிறேன்

பேசுகிறேன்

பேசாமலிருக்கிறேன்

ஆத்திரப்படுகிறேன் அமைதியாயிருக்கிறேன் அசைகிறேன்

அடங்குகிறேன்