பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 லா. ச. ராமாமிருதம்

இமைச் சிமிழ்கள் மணமிலாது திறந்தன. அவனுக்கு இன்னும் போதை கலையவில்லை. பொன்னா என்ன பவுடர் உபயோகிக்கிறாள் ?

இந்த நெருக்கத்தில் பொன்னாவின் கன்னங்களில் மல்லி கமழ்கிறது. இல்லை, பொன்னாவின் கொண்டைச் சரம் மலர்ந்ததா ? இல்லை பொன்னா, உன் வேர்வை இப் படி என் நெஞ்சுவரை மணக்க வெறும் உன் பூச்சும் பூவால் மட்டும் ஆகாது. இது உன் இளமை அல்லது என் ஆசை. திடீரென பொன்னா அவன் கன்னத்தில் தன் கன்னம் அழுத்தி மீண்டாள். 'அப்பா ! இது கன்னமா ? சப்பாத்தியா ? தன் இடது கன்னத்தைச் செல்லமாய்த் தடவிக் கொண்டாள். 'ரத்தம் வந்துடுத்தா பாருங்களேன் !”

எதிரே பீரோ கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். கண்ணாடி நல்ல கண்ணாடி. பார்க்கப் பார்க்க அலுக்காத கண்ணாடி. கலியானத்தில் அவளு டைய ஆபீஸ் சிநேகிதிகளின் கூட்டுப்பரிசு.

"பொன்னா உன்மோவாய்க் குழி இப்படி இவ்வளவு அச்சாய்ப் பிளந்து இருக்கிறது : முகத்தைச் சரிபாதியாய் தனித் தனியாய்ச் செய்து இணைத்தாற் போல் :

  • Factory Assembly us?” அவள் கவனம் இ ன் னும் கண்ணாடியிலிருந்து - மாறவில்லை. இருக்கலாம். எவ்வளவென்றுதான் அவன் தனித்தனி - யாய்ப் பண்ணுவான்!” பொன்னா தன் மோவாய்க் குழியைச் சிந்தனையாய்த் தடவிக் கொண்டாள்.

இருந்தாலும் முகத்துக்கு முகம் வேறாய்த்தானிருக்கு: அது எப்படி? ஒண்னுக்கொண்ணு எவ்வளவு அச்சாய் இருந்தாலும் ஏதோஒரு இம்மி பிசகில் முகத்துக்கு முகம் தனியாத்தான் இருக்கு!”