பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி ፲û?

'அதுதான் சிருஷ்டியின் பெருமை!” 'இதுவும் பிறவி மருத்தான்!” பொன்னா தன் மோவாய்ப் பிளவைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். 'அதனால்தான் அவ்வளவு நன்றாயிருக்கு!” - 'ஏதேது, இன்னிக்குப் பேச்சு என்னென்னவே புதுசு புதுசா வரதே பேத்தலா; அல்லது நமக்கு மணமாகி இன்னும் மூணு மாதம் ஆகலேன்னா?”

'மூணு மாதம் என்ன கண்ணு?” 'மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்:” புன்னகை புரிந்தான். 'இல்லை பொன்னா, உன் அவலக்ஷணம் கூட எனக்கு அழகாய்த் தானிருக்கும்.'

'இது என்ன விடுகதை?” 'இல்லை, பிறவி குரூபத்திற்கும் கவர்ச்சி உண்டு.” அவள் முகம் சற்று விழுந்தது. 'ஆசை மீறிப் போனதால் என்னைப் புகழறேளா? அவமானப்படுத்தறேனா?”

நான் என்ன சொல்ல வந்தேன்? எனக்கே தெரிய

நதே த வில்லை.

இருவரும் மெளனமாயினர். வேளையின் நளினத்தில் மேகம் படர்ந்துவிட்டது. இருவருமே உணர்ந்தனர், அது நெஞ்சை அரித்தது. புரியவில்லை. ஆனால் அரித்தது.

எவர் வீட்டிலோ கடியாரம் ஒரு தரம் அடிக்கிறது. ஒரு மணியா, அரை மணியா? பழுக்கக் காய்ச்சி வார்த்த உருக்குப்போல் நாதம் செவியுள் இறங்குகையில் செவி கட்டது போலவே ஒரு ப்ரமை:

தெரு முனையிலிருந்து ஒரு ஆட்டு மந்தையின் கனைப்புகளும், குளம்போசையும், கழுத்து மணியின் அலறல்களும் நெருங்குகின்றன. இந்தத் தெருவில் இது ஒரு கண்ணராவி. ஒரு நாள் விட்டு ஒரு நாள், நள்ளிரவில்