பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置等 லா. ச. ராமாமிருதம்

1

'அதுதான் தரிசனி என்று என் வாய் மூலம் நீ கேட்ட தாக நீ சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.”

"இதை நான் நம்பனுமா ?”

அவள் கேள்வி அவன் செவிக்கெட்டியதாகத் தெரிய வில்லை. அவனிடமிருந்து பதில் வரவில்லை.

தலையணை மீது அவன் முகம். ஏதோ ஒரு தினுசில். தலையணை உறை மீது தைத்த சித்திரம்போல், தலையணையோடு இழைந்திருந்தது இன்னும் கலையாத கனவில் கண்கள் மூடியிருந்தன. கனவில் கண்டு, வெளியில் விண்டு தர இயலாத ரகஸ்யம் உதட்டில் புன்னகையாய்ப் பூத்து, முகமே மெதுவிட்டிருந்தது. என்றுமே அந்த நெற்றியில் ஒரு வரி-கன்னத்தில் ஒரு அம்மை வடுக்கூட கிடையாது ஒரு ஆண் முகம் அப்படி ஒரு பொளிசல் கூட இல்லாது இருப்பது அவளுக்கு வியப்பாய் இருந்தது. அந்த வகையில் அந்த முகம் நம்பும்படியில்லை. வங்காள பாணியில் தீட்டிய ஓவியத்தில் தவத்தில் அமர்ந்த சிவத்தின் முகம். முடியில் ஒரு கங்கைதான் பாக்கி. கங்கையின் வாயிலிருந்து அருவியின் பீச்சல்தான் பாக்கி. அந்த உருவகம் மனதில் எழுந்ததும் அவளுக்குச் சிரிப்பு பீறிட்டது. அவள் வாயின்று அதன் கண்ணாடிச் சுக்கல்கள் உதிர்ந்ததும் அவளுக்குத் திக் கென்றாகி விட்டது. ஏதோ பீதி. அவனை உற்று நோக்கினாள். அவன் முகம் மாறவில்லை. ஆழ்ந்த துரக்கமா ? .

தரிசனியில் அவசமா ?

玄 மேஜை மீது குவிந்து விட்ட வேலை மீது மனம் குவிய மறுத்தது. தஸ்தாவேஜுக் கட்டுகளில் எழுத்துக்களும் எண்களும் வெறும் அர்த்தமற்ற கோடுகளும் கீறல்களு மாய்த் தத்திக் குதித்துப் பச்சைக் குதிரை விளையாடின.

நானா? - -

என்னிலிருந்தேயா ?