பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி | | }

இல்லையென்றால் இல்லை. உண்டு என்றால் உண்டு. எனும் சூத்திரத்தின் இயக்கமாய், நினைக்க மனம் ஒன்று வேண்டும். இல்லாவிடில் நீ எங்கிருந்து வந்தாய்? கனவுகள், நம் ரகஸ்ய ஆசைகள் தம் திறைவு காணத் தேடும் ஒரு வழியென்று கொண்டால், நீ என் எந்தப் பிறவியின் எந்த ஆசை :

ஒவ்வொரு ஆசையும் ஒரு பிறவி. ஒவ்வொரு பிறவியும் ஒரு ஆசை ; பிராணனின் பிம்பம்.

ஆதி மண்ணின் துல்லியத்தில் ஒற்றியெடுத்த முதற் பிம்பம், -

வாழ்வே கேள்வியாய், உயிரின் மூச்சே அர்ச்சனை யாய், பிம்பம் பிம்பமாய்க் கடைசல் ஏறி, இன்னமும் தன் ஸ்துரலம் காணத் துடிக்கும் தவிதவிப்பின் குவிப்பாய், தரிசனி ஆனாயா ? எத்தனை நாட்கள் எத்தனை ஜன்மங்க ளாய் என் பூர்வ சந்ததியின் உள் பிரக்ஞையின் அடிவாரத் தில் மூழ்கிக் கிடந்து, என்னில் உன் முகத்வாரம் கண்டு புறப்பட்டாய் ?

அத்தர் பிறந்ததுபோல். அபிஷேக தீர்த்தத்துடன் ஆண்டவன் முடியிலிருந்து அடித்துக்கொண்டு வரும் மலர் போல்.

பொருளின் உருவெடுப்பின் முன் சொல்லின் பராக்கு. நெஞ்சப் புதைவில் உன்னைப் புரிந்துகொண்டேன். ஆனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உன்னைத் தெரிந்து கொள்ளும்வரை, எனக்கு வாயி ருந்தும், நீ எனக்கு ஊமை கண்ட கனாத்தான்.

கண்டது நான். ஆனால் உன் பெயர் சொன்னது. பொன்னா. அதுபோல், ஒரு வேளை உன் முகம் பார்த்தி