பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.2 லா. ச. ராமாமிருதம்

ருந்தால், உனக்கே நீ யார் என்று சொல்வேனோ என்னவோ ?

ஆனால் நீ முகம் காட்டவில்லை. முதுகுதான் காட் டினாய்.

எனக்குத் தோன்றுகிறது. உன் முதுகும், அதன் மேல் உன் கூந்தலின் இருளும், நான் உன் முகம் காண, நீ எனக்குக் காட்டிய விளிப்பா ?

உன் பெயரைத் தந்தாய், சைகையும் காட்டினாய், அப்படியும் உன்னைத் தெரிந்துகொள்ள இயலாது நான் தவிக்கும் வேதனைதான் உன் ரகசியமோ ? என் அந்தரங்க ஆசையோ ?

விழிகள் துளும்பின.

தரிசனி,

கண்ணிரின் ஸ்படிகம். நாம ஜெபமணிகளாய்க் கன் னங்களில் உருண்டு உதிர்ந்து, எழுந்து கரைந்து, உலகம் அழிந்தது.

இப்படியும் நேர்வது உண்டோ ?

அடுப்பை ஊதி ஊதிப் பொன்னாவுக்கு முகமே ஊதி விட்டது.

பொன்னா.

புகை கண்ணை அடைத்துக்கொண்டு மூ ச் சு த் திணறிற்று. நெஞ்சு எரிநதது.

-பொன்னி.

இன்றைக்கு விறகும் வேடிக்கை காட்ட வேளை பார்த் துக் கொண்டதாக்கும்.

அதற்குக்கூட என்னைப் பார்த்தால் இளப்பமா யிருக்கு.

-பொன்னு.