பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! ! லா. ச. ராமாமிருதம்

"-egt 5g gaan gytslabowa. Rest, Rest, Rest grtog Cures” என்று டாக்டர் தைரியம் சொன்னாலும், கோபண்ண வுக்குப் பழைய உடம்பு வரவேயில்லை. வரவும் வராது.

அவள் கணவன் வீ ட் டி ற்கு க் கிளம்பியதும், ரயிலடியில், ஜன்னலுக்கு வெளியே நின்றபடி, "நீயும் போன பின் இங்கே என்ன இருக்கிறது!” என்று மூச்சு தேம்புகையில், அவள் தொண்டையில் எழுந்த அடைப்பு என்றும் மறக்காது. அந்த முகத்தை அப்படியே இழுத்துத் தோளில் அழுத்திக் கொண்டால். அவன் குழந்தை; அவள் தாய்.

ஆனால் அம்மா, ஏதோ பெயரும் தெரியாத மூணு நாள் ஜூரத்தில் திடீரென்று போனதும், எல்லோருக்குமே காலை வாரித்தான் விட்டது. அதுவும் தக்க பெண் துணை வேறு இல்லாத இடத்தில்-அவளுக்கு இன்னும் பாவாடை சட்டைப் பருவம் மாறவில்லை. அவரவர் தம் தம் நிலை மீள்வது சுளுவாயிருக்கிறதா?

ஆனால் மீளாமல் இல்லை. துக்கத்திலிருந்து மீளத் தான் மீள்கிறோம். இல்லையென்கவில்லை. அம்மா போனவிடத்தில் சமையற்காரப்பாட்டி சம்பளத்துக்கு வருகிறாள். பாட்டிக்கு இருந்தாற் போலிருந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு காசி நினைப்பெடுத்துக்கொண்டு நின்றுவிட்டால், ஒரு மாமி வருகிறாள்.

'தள்ளி வெச்ச ஆம்படையான் என்னைத் திரும்ப அழைக்கிறான். எனக்கு செலவு கொடுங்கள்” என்று கேட் டால், அவள் வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்க முடியுமா?

மாமி போன பிறகு ஒரு பையன் வருகிறான்.

அவன் வெந்ததும் வேகாததும், உண்டையும் உருளையு. மாய்ப் பண்ணிப் போட்டதையும், கண்டேன். கண். டேன்' என்று உண்கிறோம்.

"எல்லோரும் போட்டதைச் சாப்பிடுங்கள், சொல்லி விட்டேன். நீங்கள் ஏதேனும் மூச்சு விட்டேளோ, கேசவன்