பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி *7

சகுனம் சம்பவம் நம்பிக்கை

கேள்வி பதில் சமாதானம் நன்மை புண்ணியம் தீமை பாவம் எல்லாமே த்வனிகள் தான் மெளனமும் ஒரு த்வனிதான்

ஒலியே நீ மோனத்துள் புகுந்து கொண்டதால் உன்னைக் கேட்கவில்லை என்று உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாயா ? கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது. நீ அதை அறிவாயோ ? எல்லாம் நெஞ்சு நிற்கும் மீட்டலுக்கேற்ப ஆனால் அறிவது, கேட்பது இவையெல்லாம் என்ன வெறும் வார்த்தைகள் தானே!அவைகளின் பொருளும் உண்டான பொருளல்ல. அவ்வவ்வார்த்தை வரம்புள் சொல் ஒட்டம் நீடித்தவரை நாம் நமக்கு

ஆக்கிக்கொண்ட பொருள். ஆனால், சொல்தாண்டிய உயிர், அவ்வுயிரையும்

குடித்து உயிருடன் உயிர்தந்த பொருளையும் விழுங்கிய இருள்பற்றி நாம் என்ன கண்டோம் ! ?

என் தாயும் நம்பிக்கைகளைக் களைந்தவள்தான்.

"ஆமாம், உனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் ஆம்தான் உன் தகப்பனுக்கு சிரார்த்தம் பண்ணிப்