பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி 139

ஆகவே ஒரு நாள் பிற்பகல், அவள் டொமாட்டேன் கலர் நைலான் புடவை ஒன்று புதிதாய் உடுத்திக் கொண்டு இடுப்பில் சரிப்படுத்திக் கொண்டே மாடிப் படி "திடு திடுவென இறங்குகையில், மணி அய்யர்: இன்னிக்கென்ன டி.பன்?” என்று கூவியதும், சமையலறை யிலிருந்து அவர் மணிக் குரல், கேஸ்ரி, பஜ்ஜி!” என்று எதிர் கூவியதும், உள் பொங்கிய உவகை சிரிப்பாய்ப் பீறிட்டது. - -

அடுப்பங்கரையிலிருந்து மணி அய்யர் வெளி வந்தார். ஆள் சரியான உருட்டுக் கட்டை, மார்பிலும் முதுகிலும் மயிர் அடர்ந்து சுருண்டது. மொச மெர்ச'வென ரோம

"இன்னிக்கு டிபன் உனக்கு bore அடிககாதுன்னு எனக்குத் தெரியுமே! உனக்குப் பிடிக்காவிட்டாலும், பெண் பார்க்க வரவாளுக்கு இந்த டி.பன்தான் எம்பிர திாயம்: ' -

விஷமக்கார மனுஷன். ஏழிைக் குறும்பன். விழியிலிருந்து சதையை உரித்தாற்போல் கண்ணுக் கொரு பச்சை. உலகம் ஒரு பளிச்சு. அதுவே உடலுக்கும் மனதுக்கும் ஒரு தென்பு. கூடவே, இது இன்னும் எத்தனை நாளைக்கு” என்ற பயம் தலைக்காட்டி னாலும், இப்போதைக்கு change இருக்கோன்னோ!

இந்த நாளில் பெண்ணானாலும் சரி, பிள்ளையா னாலும் சரி, யாருக்குத்தான் சுருக்க கலியாணம் நேர்கிறது. காலத்தையும், ஆபீஸில் சில சினேகிதிகளின் கதியையும் உத்தேசித்தால், அதிர்ஷ்டம். அவள் பங்கில் தான் இருந்தது.

அவருக்கும் பெற்றோர் இல்லை. நெருங்கிய உறவினர் யாருமில்லை. அந்த முகத்தில் தெரிந்த சாந்தம், நெஞ்சின் அலைகளின்மேல் எண்ணெயை ஊற்றினாற்போல் ஒரு