பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恩罗罗 லா. ச. ராமாமிருதம்

எல்லோருக்கும் அம்பலமாகும் போது ஆகட்டும். £jon’t Care. -

யார் இவள் தரிசனி? பெயர் வாயில் வந்ததிலிருந்தே மனுஷன் சரியாயில்லை. காலையிலேயே கி ள ம் பி ஆபீஸுக்குப் போயாச்சு. சாப்பாட்டை எடுத்துப் போக டவாலி வ ந் த ா ல் உண்டு இல்லாட்டா இல்லை. உண்மையில் வேலையா? இல்லை, என்னிடமிருந்து ஓடி, ஒளிகிறானா? . .

யார் அவள்? வீட்டு வேலைக்காரியா? ஆ. பீ ஸி ல் ஸ்கியா? கலியாணம் ஆனவளா? ஆகாதவளா? வினிமா எக்ஸ்ட்ராவா? அவாளுக்குத்தான் இந்த மாதிரி உலகத்தில் ஒட்டாத பேர். வெச்ச பேர் காத்தாயி, கருவேப்லை என்றிருக்கும். நானே பொன்னிதானே !

எந்தைய நாள் தொடர்போ? நான் வந்தபின் அறுந்ததோ, அல்ல, ஒளி மறைவில் இன்னும் கெட்டிப் பட்டிருக்கோ ?

இம்மாதிரி இரட்டைக் குடித்தனம் நடத்துபவர் க வி ய ர ன த் து க் கு முன் அவளுடைய ஆபீஸ் நாளிலேயே அவளுக்குத் தெரியும். சம்பள தினத்தன்று 'சொசைடி'யில் கடன் பிடிப்பு, ஈட்டிக்காரன் பிடுங்கிக் கொண்டது. அக்கம் பக்கத்தில் கைமாற்றாய் வாங்கினது எல்லாம் பட்டுவாடா ஆகிப்பாக்கி ஒரு ரூபாய் மிஞ்சும். அதைக் கவலையில்லாமல் ‘ஹாய்"யாக கான்டி'ளிைல் மாணிக்கம் நாஸ்தா பண்ணிக் கொண்டிருப்பான்.

'என்னடா மாணிக்கம்?"

"என்னம்மா பண்றது? நீங்களா சொல்லுங்க. இதைப் பெண்சாதிக்குக் கொடுப்பேனா தொட்டுத் தாலி கட்டினவ இப்ப மூணாவது உண்டாயிருக்கு. இன் னொண்ணுக்கு என்னண்டை வரபோதே ரெண்டு இளஞ் ஜீவனோடு வந்துட்டுது-என்னா அப்படி முளிக்கிறீங்க? முளி தக்காளியாட்டம் கீளே விளுந்துடப் போவுது :