பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி 盟爱。警

என்னத்தப் பண்றது சொல்லுங்க. நம்மை நம்பி வந் துட்டுது. கைவிட்டுட முடியுங்களா ? அத்தாலேதான் அல்லாடறேன். நாளைக்கு வரப்போ கியாபகமா ஒரு பத்து ருவா நோட்டு கொண்டு வாங்க அஞ்சு தேதிக் குக்கொடுத்துடறேன். தேதி குறிச்சுட்டால் தவற மாட் டேன். மறுபடியும் கேட்டால் நீங்க கொடுக்க வேணாம் ?”

அவளுக்குப் பக்கத்து வீட் ஸிதாவின் கேஸ் மாத் திரம் என்ன, அதுவும் தோசையைத் திருப்பிப் போடு

தான்."

'இதோ பார் பொன்னி. நீ கலியாணமாகி, குடும் பமா வாழறப்போ உன் குழந்தை குட்டி ஏதுக்கேனும் *ளதோ'ன்னுமாத்திரம் பேர் வெச்சுடாதே, அது அத்தனை அபாக்கியம். அதுக்கு நான் சாr. இத்தனைக்கும் எங் கப்பா ஜோஸ்யத்தில் புலின் னு பேர். எல்லாப் பொருத்த மும் பார்த்துத்தான் கொடுத்தா பேர் கூடப் பொருத்தம் போயேன். அவர் ராமச்சந்ய்ரன். நான் வீதை. ஆனால் அப்புறம் தான் தெரி ஞ் சு. து நான் ஸிதை. அவர் பேரளவில்தான் ராமச்சந்த்ரன், லீலையில் சுப்பிரமணிய ஸ்வாமி. நானே உங்கிட்டே சொல்றேனேன்னு சங்கோ சப் படவேண்டாம். மறைச்சு வெக்கற நாளெல்லாம் மலையேறிப்போச்சு உலகம் தெரிஞ்ச விஷயமாப் போச்சு. இப்போ நானே ஒரு தினுசா சமாதானமாயிட்டேன். *உங்கள் மேரிக்குப் பிடிக்குமே'ன்னு குடலை இட்டிலியோ, அரிசி அப்பளாமோ, வடுமாங்காயோ, நானே கொடுத் தனுப்பறேன், ஏனம்தான் லேசில் திரும்பி வராது. பத்து நாள் கழிச்சு வரப்போ, அதற்குள் அதில் மீனைத்தான் அலம்பித்தோ, நண்டைத்தான் நறுக்கித்தோ. மட்டனைத் தான் வறுத்ததோ, முட்டையைத்தான் வேக வெச்சுதோ, ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம், அவ னு க் குத் தா ன் அர்ப்பனம்.”

லலிதா சிரிக்கிறாள். ஆனால் விழி தளும்புகிறது.