பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இவளோ ?

மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின.

சென்னையில் கர்னல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர் வையும் மறந்தது.

ஆனால் வெய்யிலை மறக்க நான் இங்கு வரவில்லை. உத்யோகம் புருஷ லட்சணம். 'ராமாமிருதம், உமக்கு மேற்பதவி வேணுமானால் இனி சென்னையில் இல்லை, நீர் வெளியூரு போகவேண்டி யது தான். நான் சொல்லவில்லை. இது உங்கள் சங்கத்தின் தீர்ப்பு. இருபத்துமூன்று வருடங்களாய் உயர உயர இதே ஆபீசில் இருந்து விட்டீர்களாம். உங்கள் சங்கத்திற்குக் கண்ணைக் கரிக்கிறது. இப்போதெல்லாம் நிர்வாகம், நிர் வாகஸ்தர் கையிலா இருக்கிறது? இருந்தாலும் களபலிக்கு உம்மைத் தேர்ந்தெடுத்திருப்பதே உமக்கு தனிப் பெருமை யல்லோ ? என்ன சொல்கிறீர்கள் ?” நான் ஒன்றும் சொல்லவில்லை. தனிப் பெருமைக்கும் நான் ஆசைப்படவில்லை.

y

பதவிக்கும் ஆசைப்படவில்லை. இது வரை நான் உழைத்தது போதாதா ?

ஆனால் சேர்த்து வைத்து அவளுக்கு இருக்கிறதே !

'நன்னாயிருக்கு, வலிய வர சீதேவியை நீங்கள் காலால் உதைச்சுத் தள்ளறது ! தெருவில் போறவா கல் லால் அடிக்காட்டா, ரெண்டு முழம் முண்டில் நீங்கள் ஆபீ சுக்குப் போயிடுவேள். ராத்திரி உங்களுக்கு மோருஞ் சோறு போறும், நாங்கள் அப்படியா ? உங்கள்