பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவளோ 岁?

டல் சாப்பாட்டில் தவிக்க விட்டுட்டு ? வளரும் பயிர் களாச்சே : -

இதுவரை குழந்தைகளை விட்டு நெடுநாள் பிரிந்த தில்லை. இப்போது மாலை வேளையில் ஆபீஸ் மொட்டை மாடியில் நிற்கையில், நினைவு என்னையும் மீறிக் குடும் பத்தின் மீது சாய்கிறது ; முக்கியமாக ரீ காந்த் பெட்ரூம் லைட் சிம்னி போன்று அழகிய சிறு உருண்டைத் தலை. சிறு கூடாய் உடலும் அதே அளவில் வார்ப்படம். லாத்திரி ஆச்சே, அப்பா எப்போ வருவார்? அம்மா. லாத்ரி ஏன் வரது'

'நான் பெரியவனானா என்ஜின் டைவர் ஆகப் போறேன்.'

" அப்பா, டைவர் பெரீவனா? கண்டக்டர் பெரீவனா? கண்டக்டர் பிகில் கொடுத்தாத்தானே டைவர் போகலாம்: 'ஏண்டி காயத்திலி, பார்த்தயாடி என் பாடி பில்டர் தோளிலே தவளை வரது !

'நீதான் குண்டோ? என்னை வினை வினைங் கறேளே, நானும் குண்டாயிடுவேன்-”

காயத்ரீ ஒரு துரும்பைக்கூட எடுத்து நகர்த்த மாட் டாள். சதா பள்ளிக்கூடம், ஸ்பெஷல் கிளாஸ், டான் ஸ் தையல், படிப்பில் படுதுடி. வகுப்பில் அவள்தான் லீடர். (அப்படி என்றால் என்ன ?) பொண்ணுக்கு வயது பதினொன்றிலேயே அவள் அம்மாவுக்குக் கல்யாணக் கவலை. காயத்ரிக்குக் கல்யான வயதும் வேளையும் வரும்போது என்னைத் தகரக் கொட்டகையில் வைத்தாகி விடுகிறதோ என்னவோ ?

இப்போது மாலை மங்கிவரும் வேளையில், ஆபீசில் மொட்டை மாடியில் தென்னங் கீற்றுக்களின் சலசலப்பி னிடையில், தன்னந் த னிய னா ய் நான் நின்று கொண்டிருக்கையில், அவர்கள் இவ் வேளைக்கு என்ன செய்து கொண்டிருப்பார்கள்?