பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13& லா. ச. ராமாமிருதம்

வாசனையில் உயிரின் சாதனையாய்க் கட்டிக்கொண்டு அழுகிறோம், சிரிக்கிறோம், தவிக்கிறோம், உவக்கிறோம், ஒற்றையடி வரப்பில் ஒன்வே டிராஃபிக்.

இருந்தாலும்

ஆனாலும்

உண்மையே இதுதான். உண்மையை ஏ ற் று க் கொண்டே, அதே மூச்சில் உண்மையின் மறுப்பு; பொய். யோடு நிரந்தர உடன்பாடு; அசுவத்தாமா என்கிற யானை, தேர்ச் சக்கரங்களுக்கு மக்கர்’ எ ண் .ெ ண ய் , உயிருக்கு இழைக்கும் துரோகம்-அதுவே உயிரின் உந்துத லாய் அமைகிறது. ஆனாலே" என்பது அதனாலே’ ஆகிவிடுகிறது.

மிஸ்டர் வாட்ச்மேன் இன்னும் வரவில்லை. அவருக்கு நினைப்பு வரும்போதுதான் அவருக்கு ஆபீஸ் வேளை. வரும் போதே மார்வரை கைகளைத் துரக்கிக்கொண்டு (இந்த தினசரிச் சடங்கில் முழுக் கூம்பலுக்கு கைகளுக்கு வணக்கம் ஏது? கள்ளச் சிரிப்பு சிரித்துக்கொண்டே வரு வார். ஆமா இதுபோல எத்தனை சாமியைப் பார்த்திருப் பேன் இனி மேலும் பார்க்கப்போறேன் ! இன்னைக்கு இந்த ஐயாவுக்கு மசிஞ்சு கொடுத்தோம்னா பின்னால் வர ஏசண்டுகளுக்கெல்லாம் வழி சொல்லிக் கொடுத்தா மாதிரி யில்லே ஆயிடும் ! அப்புறம் நம்ம லைட் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆவறது ? மாந்தோப்புக் குத்தகை, வாரத்துக்குப் பயிர், யூரியா வியாபாரம், சொஸைட்டிக்கு பால் சப்ளை, சம்பாதிக்கிற வேளை போக மிச்ச நேரம் வீண் போகாமே இங்கே சம்பளம். எனக்கு இருபது வயசிலேருந்து நடந்து வர இந்த ஏற்பாட்டை இன்னிக்கு வந்து அவரு மாத்தியெழுத முடியுமா எ ளு த த் தா ன் விடலாமா?

நினைவின் ஏக்கம் எப்படி நெஞ்சின் நோக்காடாவே மாறி விடுகிறது. நரம்புகள் ஒன்றை ஒன்று வலிக்கும் பி.குவில் தந்திகளின் மீது மோன கீதம் விளையாடுகிறது.