பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவளோ 芷3盒

அங்கங்கே அதன் குங்கிலியம் குபிரிடுகிறது. எந்தச் சமயத்தில் எந்தத் தந்தி அறுந்து விடுமோ? அறும்

வேகத்தில் வாத்தியத்தையே சாய்த்து வி டு மே ? பயமாயிருக்கிறது. மாரைப் பிடித்துக் கொள்கிறேன்.

மலைச் சாரலில் இருந்து உருட்டி விட்டாற்போல் இருள்படுதா எப்போது இறங்கிற்று? கரும்பட்டில் ஜிகினாப் பொட்டுகள் போன்று மின்மினிகள் ஆங்காங்கே சுடர் சொட்டுகின்றன. மலைக் குன்றுகள் இருள் பொதிகளாய் எ ப் போ து மாறின ? அவைகளின் பின்னணியில் பிதுங்கும் வானத்தில் அழுத விழியில் நரம்பு போல் லேசான செவ்வரியின்படர், அரசனின் மேலங்கி போல், இரவின் மடிகள் கம்பீரமான வீச்சில் என்னைச் சுற்றிப் புரள்கின்றன.

‘இன்று இதுவரை நீ விளையாடியதுபோதும், நேரமா யிற்று’ என்று உணர்த்துவது போன்று இரவு தன் அகண்ட ஆலிங்கனத்துள் பகலை இழுக்கையில், மாலை இரவுள் கடக்கையில் இடையில் எல்லைக்கோடு அழிகை யில் பிரும்மசோகம் என்னைக் கவ்வுகிறது. நெஞ்சில் திடீரென அமிர்த கலசம் உடைத்தாற்போல் நெஞ்சு முகட்டை ஏதோமுட்டுகிறது. தென்னங்கீற்றுகளின் வழி அலைந்து வந்து என் மேல் படுவது.

--தேவர்களின் மூச்சா?

-அசுரர்களின் மூச்சா?

பெருமூச்சையடுத்து என் பின்னால் ஆள் கணைப்பு சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆபீஸ் அறை வாயிலில் ஒரு உருவக்கோடு நின்றது.

"யாரது?”

ஸ்விட்சைப்போட்டேன், ஆனால் மின்சாரம் இல்லை, இந்தப் பக்கம் இது சகஜம்.

"நகையைத் திருப்பணுங்க."