பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

惠32 லா. ச. ராமாமிருதம்

'உனக்கு நேரம் பொழுதே கிடையாதா?’-என்னை யறியாமல் என் குரல் தடித்தது. 'இதென்ன பாங்க்கா, உன் வீட்டு மாட்டுக்கொட்டாயா? உன் வீட்டுலே உன் மாடு நீ நினைக்கிற வேளையெல்லாம் கறக்குதா? உன்னை யார் உள்ளே விட்டது?”

"கதவு திறந்திருந்தது. கொஞ்சம் பொறுமையாய்க் கேளுங்க. நீங்க கேட்டுத்தான் ஆவனும்.”-அவன் குரலில் மரியாதை குறையவில்லை. ஆயினும் கட்டாயம் இருந்தது. பட்டிக்காட்டானுடைய பிடிவாதம். இவன் மறுப்பை ஏற்கமாட்டான், இவன் செவியில் ஏறாது. என்னைத் திகில் பிடித்துக்கொண்டது. நானோ ஊருக்குப் புதுசு. இவன் கத்தியெடுத்துக் காண்பித்தால் என் கதி என்ன ? யார் கீழே கதவைத்திறந்து வைத்துவிட்டுப் போனது ? வாட்ச்மேன் ஏன் இன்னும் வரவில்லை ?

"இந்தப் பெண் பிள்ளையினுடைய தாலியைத் திருப்பனும்!” .

ஓ! இவனோடு இல்லையா? அப்பொழுதுதான் அவன் பின்னால் இன்னொரு உருவம் நிற்பது அறிந்தேன்.

உடம்பு பூரா தலை உள்பட இழுத்துப் போர்த்திய ஒரு மெளனமான மொத்தாகாரம் அல்லது மொத்தாகார மெளனமா?

'இது ஒரு விசேடமான சமயம், நீங்கள் கைகொடுத்தே ஆவனும்.”

'நான் உதவறதுன்னா என்ன? என்கிட்டே பணம் கேக்கறையா? முன்னையும் தெரியாது, பின்னையும் தெரி யாது. திடீர்னு நடு இருட்டிலே முளைச்சு என் மேலே மரமா ஆடிக்கிட்டு கைகொடுன்னுஎன்னப்பா சொல்றே?” இருளில் என்னை எட்டிய அவன் சிரிப்பில் கேலி புகைந்தது.

பனம் கொண்டு வந்திருக்கோம் சாமி இவ கையெழுத்துப் போடுவா அடையாளத்துக்குக் கவலை