பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவளோ 133

வேணாம். தேவையானா தெரிஞ்சவங்களையும் கூட்டி வந்தாலும் போச்சு." -

"எல்லாம் நாளை வா...”

'அப்படிச் சொல்லக்கூடாது. இன்னும் அரை மனி நேரத்திலே இவ புருஷனை ஆஸ்பத்திரியிலேருந்து மீட்கனும்.”

எனக்கு திடீரென கைகால்கள் ஒய்ந்தன. நாற்காலியில் சாய்ந்தேன். தலையில் ஒன்றுமே புரியவில்லை. இந்த ஊர் புரியவில்லை. இந்த ஊர் பாஷை, லேவாதேவி, மனிதர்கள் எல்லாமே இப்படித்தானோ!

'சித்தே நான் சொல்றதே செவி வாங்கிக்கங்க. நமக்கு நேரமில்லே.'

சரி, இனி தப்ப வழியில்லை. நமக்கு எனும் பிரயோகத்தில் என்னையும் தங்கள் காரியத்துக்கு உடந்தையாக்கிக் கொண்டு விட்டார்கள்.

'இந்தப் பெண் பிள்ளை நமக்கு எதிர் வீடு. ஆறு மாதத்துக்கு முன்னர் இவ புருஷனை ஆஸ்பத்திரியில் சேர்த் தது. அதென்ன ஜுரமோ தெரியல்லேங்க-மாயக் காய்ச்சல் விடாமல் மழுவாய்க் காயுதுங்க. வீட்டிலிருக்கிற பண்டம் பொருளெல்லாம் வட்டிக் கடைக்குப் போயாச்சு. காய்ச் சல் டிகிரி இன்னும் இறங்கிட்டில்லே. கடைசிலே வைக்க வீட்டில் ஏதாச்சுமில்லே. நாங்கள் எல்லாம் என்னங்க பயிர்த் தொழில்: அன்னாடக் கூலிக்காரங்க

ஒஹோ வாட்ச்மென் வந்து விட்டாரா o சரி போய் காஷியரைச் சாவியோடு வரச்சொல்-” காஷியர் 'கடு கடு முகத்தோடு வந்தார். "சார், உங்களுக்கு இந்த ஊரைத் தெரியாது. கொஞ்ச இடத்தைக் கொடுத்தால் குளம்பு, நகம், கொம்பு கூடப் பிரிக்காமல் முழுங்கிடுவா. நீங்கள் இப்படித்தான் இவாளி