பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

温3蛋 லா, ச. ராமாமிருதம்

உம் நல்ல பேர் எடுப்பதாக எண்ணம். ஆனால் நான் எங்கள் யூனியனுக்கு எழுத வேண்டியதுதான்-'

"அதெல்லாம் பின்னால்னா? இப்போ நகையை எடுப் போம்.”

திடீரென்று சொல்லி வைத்தார்போல் விளக்குகள் தாமே ஏற்றிக்கொண்டன. திடீரென இரவின் இருள் 'திகு திகு வென எரிந்தது. இதுதான் சகுனமா ?

"பணத்தை எப்படியோ பிரட்டி வந்துட்டோமுங்க. குறையா இருந்தால் வட்டியைப் பார்த்துப்போடுங்க. நீங்க மனசு வெச்சா உங்களால் ஆகாத காரியமா ? ஏழை மக்கள் வயத்துல பாலை வாருங்க ”

அவள் கையெழுத்துப் போடும்போது மூக்கு துணி கூடத் தெரியவில்லை, அவள் இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்த அடைப்புக்குள் அவ்வளவு பத்திரமாய் இருந்தாள்.

தாலியை உள்ளங் கையில் அமுக்கிக் கொண்டு விடு விடு" வென மாடி இறங்கிவிட்டாள். அவளுக்கு வாயாக வந்த ஆளும் அவளோடு மறைந்தான். காஷியர் மொன மொனத்துக்கொண்டே போனார். பின்னாலேயே வாட்ச் மென் பக்கத்தாத்துப் பாட்டியுடன் பேசப் போய்விட் டான். இடம் திரும்ப வெறிச்சாயிற்று.

நான் விளக்கை யணைத்தேன், எனக்கு வெளிச்சம் வேண்டியதில்லை. மொட்டை மாடியில் வானம் நகத் திரக்குடை பிடித்தது.

பிறகு அவள் என்னவானாள் ? அவள் புருஷன் உயிர் அவள் தாலி பாக்கியத்திற்குக் கட்டுப்பட்டதா ? நான் தெருவில் போகையில் அவள் உடல்வாக்கில் எந்த ஸ்திரி உருவம் என்னைக் கடந்தாலும் திரும்பித் திரும்பிப் பார்த் துக் கொண்டு

இவளேதான் அவளோ ?