பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி இ.

என் பிறப்புத் தான் என் வசத்திவில்லை. வாழ்க்கையோ பிறருடையதாப் போயிடுத்து. என் சாவாவ்து என்னு டையதாயிருக்கட்டும். நீயிறைக்கும் எ ள் ளு க்கு ம் , தண்ணிருக்கும் நான் கரையோரம் வந்து, வாயைத் தி ற ந் து ண் டு காத்திருப்பேன் என்று எண்ணாதே, எனக்கு சுயக் கெளரவம் உண்டு.'

ஏன் இப்படித் தன்னை முறுக்கேற்றிக் கொள்கிறாள் என்று நான் திகைப்பதுண்டு. ஆனால் அவள் சொல்வதில் எங்கோ உண்மை புதைந்திருக்கிறது. எங்கே என்னைக் கண்டு பிடி' என்று எள்ளி நகையாடுகிறது.

ஆனால் என்றேனும் ஒரு நாள் உண்மையை முகமுழித்துத்தான் ஆகவேண்டும், தப்ப முடியாது.

என் தாய் உண்மையைக் கண்டு ஒடி ஒளிபவள் அல்ல. எத்தனையோ முறை வயிற்றுவலி அவளுக்கு வந்திருக் கிறது. ஆனால் இப்போது வந்ததும் சொல்லி விட்டாள்; 'அம்பி, இந்தத் தடவை நான் பிழைக்க மாட்டேன்' என்று, நள்ளிரவில், முன்பின் அறிகுறியிலாது வலி நேரே வயிற்றில் விழுந்து வெட்டியதும், உடல் இன்னும் விட்டுக் கொளளாத இரு துண்டுகளாக அது அது அதனதன் தனிப் போக்கில் படுக்கையில் நெளிகையில், அம்மா வலி பொறுக்காது என்னடா பாவி பார்த்துக் கொண்டிருக் கையேடா, கத்தியிருந்தால் என்னைக் குத்திடேண்டா, உனக்கு மனமில்லாட்டா என்னிடமாவது கொடேண்டா: என்று கெஞ்சிக் கதறி, கத்திக்கத்தி, விடியற்காலை புலம் பல் அடங்கி ஓய்ந்து, ஒரு தரம் புரண்டு அசைவற்றுக் கட்டையானதும் சடலத்தினின்று பிரிந்த கடைசி மூச்சு டன் என்னின்று ஒரு பெருமூச்சு கலந்தது.

அப்பாடா! கத்தியைக் கொடுக்காமல் தப்பித்தேன்.

'ஆனால் எனக்கு என் த ய் மே ல் அன்பு உண்மையாயிருந்தால், இந்தச் சமயத்தில், நான் கொலையாளியாக அஞ்சியிருக்கக் கூடாது. ஆகையால்