பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்? 137.

குறைவில்லை. அண்டாவைத் தூக்கிச் .ெ சம் பி ல் ப்ோட்டால் என்ன?

கிழக்கு மேற்கு ஆகாதா ? பார்க்கப் போனால், எல்லாம் பேர்கள்தானே! ஊசிக் காதில் ஒட்டகம் நுழையாது என்று கணக்கு ஒன்று ஊசிக்காது பெரிதா யிருக்கணும். அல்லது ஒட்டகம் சின்னதாயிருக்கனும்

அவ்வளவுதானே!

கதைக்குதவாது. ஆனால் இதுபோன்று கவலைகள் யாரையும் ஒருசமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் உறுத்தும் உறுத்தியிருக்கும் என்பது உறுதி.

மாடியிலிருந்து இறங்க ஆரம்பித்தேன். எனக்கே சற்று வியப்புத்தான். இவ்வளவு நேரம் தாண்டிய விழிப்பு எனக்குப் பழக்கமில்லை. ஞாயிற்றுக் கிழின்ம கொண்டாடுகிற ஆசாமி. நான் இல்லை. அன்று வீட்டில், யாரும் எழுவதிலிருந்து, காப்பி, குளியல், சமையல், சாப்பாடு எல்லாமே நேரம் தள்ளிப்போகும். அன்று எந்தக் காரியத்திலும் சோம்பல் வழியும் அன்று பையன்களுடன் அவளும் சேர்ந்துகொண்டு விடுவாள். "ஆமாம் எங்களுக்கு வயசாச்சு. துரக்கம் கெட்டால் நான் பொறுப்பா! ஓடாய் உழைச்சு இத்தனை நாளைக்கு என்னத்தைக்கண்டேன் ? மனுஷான்னா ஒருநாள் கண் அசராதா என்ன! ஆபீஸ் இல்லை. அதற்காக வீட்டில் ஆபீஸ் நடத்தனுமா என்ன!'

நான் வாய்திறவாமலே முன்கூட்டியே சவால். பல்விளக்கி, முகம் கழுவி சமையலறையில் நுழைகை. யில் காப்பி கலந்தாகிவிட்டது. பையன்கள் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். ஒரு அ டு க் கி ல் ஒரு மட்டாய் கலந்து அவரவர்க்குக் கரண்டியில் அளந்து விட்டுக் கொண்டிருந்தாள். -

மோஹினி.