பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்? 139

கொடுத்துண்டு எங்கள் நரேஷ் உங்கள் வீட்டில்தான் குடியிருக்கான். பச்சைக்கும் தண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சைப்பாம்பு புடுங்கித்துன்னா யாருக்கு யார் ஜவாப் சொல்றது வோய் ?)

வீட்டுக்காரான் நியாயமே தனி. அதுதான் இந்நாளில் எடுபடும் நியாயமும்கூட. நாங்கள் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் தானே ? எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால் ஒரு இலை நறுக்கப்போமா ?

"ஒய், நீர் இப்படி இலையை நறுக்கினால் குலை போடுவது எப்பவோய்? உங்கள் சுலரே எரம் முனைச்ச துன்னு நீர் என்ன எதிர்பார்க்கிறீர் ?”

சொல்லெறிகளைத்தான் என்னால் எதிர்பார்க்க முடியும்.

இரவோடு இரலாப் எவனாவது குலையை அறுத்துப் போனாலும் போகலாம். ஆனால் நாங்கள் ஆசைக்கும் ஒரு இலையை அடைய முடியாது.

ஆசை, ஹாம்-படவேண்டாம் என்று ហ៊” சொன்னது? படேன், நிறையப்படேன், அதில் கூடவா தரித்திரம்?

நாங்கள் வெச்சது எங்களுக்கு உபயோகமில்லை என்கிற ஆத்திரத்தில் அடிமரத்தில் கத்தியைப் போடத் தான் தோன் றினாலும் மனம் வருகிறதா? அல்ல, கருகிப் போகட்டுமேன்னு காயப்போட மனம்தான் கல்லாகிறதா?

ஆனால் தான், பிழைக்க, அது இனி எங்களை நம்பி யில்லை. அது தலையெடுத்தாச்சு குலை தள்ளியாச்சு. அது இனி வாழையடி வாழையாகப் பெருகிக் கொண்டே போகும்.

போதும் போ தா த் து க் கு க் கிராமத்திலிருந்து சின்னான் வந்து சொல்லிவிட்டுப் போய்விட்டான்.