பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்? 141

மூக்கைத் தடவிய வண்ணம் சுற்றும் மு ற் று. ம் பார்க்கிறேன்.

மூத்த பையன் முகத்தில் அசடு வழிந்தது.

ஆனால் எனக்கு ஏன் இம்மிகூட கோபம் இல்லை? எனக்கே ஆச்சர்யம். எனக்கு பேர் என்னவோ ஸ~ர்ர்ர்: -வாணம் கட்டி விட்டு, குடும்பம் அப்பப்போ என்னை நசுக்கி, குடும்பம் தன்னிஷ்டத்துக்கு என்னைப்பதப் படுத்தி விட்டதா ?

பேப்பரைப் பிரிக்கிறேன். அப்போத்தான் சில தினங்க ளுக்கு முன் மறைந்த கான் அப்துல்லாகானைப்பற்றி அவ ருடைய சிஷ்யை எழுதிய கட்டுரை எடுத்தவுடன் கண்ணில் படுகிறது. முதல் வரிகளிலேயே கட்டுரையில் ஆழ்ந்து போனேன். கான் ஸாஹிப்பின் ஸான்னியத்யம் வரிக்கு வரி பரிமளிக்கத் தொடங்கிவிட்டது. எவ்வளவோ வசதிகள், கெளரவங்கள் விரல் சொடுக்கில் காத்திருந்தும், மனுஷன் தன்னிச்சையில் வரித்துக்கொண்ட எளிய வீடு, எளிய வாழ்க்கை, ஆரோக்யமும் சுத்தமும் நிறைந்த அவருடைய பழக்க வழக்க பாவனைகளில் அவர் காட்டிய ஆர்வம் மட்டுமல்ல, சிஷ்யர்களிடமும் கடைபிடித்த கண்டிப்புபடிக்கப்படிக்க இன்பம், சுருக்க முடிந்துவிட்டதே ! கட்டுரைதான் சின்னதா, அல்லது ருசி காட்டி என் பசிதான் பெரிதாகி விட்டதா ?

கட்டுரையினுள்டே எனக்கு ஒன்னு புலனானது. அவ ருடைய அப்பியாசம். அப்பியாச மூலமாக போதனை. ஒழுக்கம்: அக, புற சுத்தத்தின் தோற்றுவாயாக ஸங்கீதம்.

அடுத்துத் தோன்றுகிறது. பேச்சு மூச்சுமாய், நம் மூதறிஞர்கள், மஹான்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட லசrயம்-தெய்வமோ, நேசமோ கலையோஎதுவாயிருப்பினும் அதற்கு முதற்படி, அல்லது அதில் அவர்களைக் கொண்டு போய்விட்ட முதல் வழி, உடல், உடை, மன சுத்திதான்.