பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் ? 143

இந்தத் தர்க்க ரீதியின் அடிப்படையில் அனைவருமே செளந்தர்ய உபாஸ்கர்கள். தன் புற, அக, ஆத்ம, அந்தக் கரணத் தூய்மையின் வெளியீட்டாகக் கான்ஸாஹிப் சங்கீதத்தை அனுஷ்டித்

"அப்பா நரசிம்ம மாமா வந்திருக்கார் காயத்ரீ அறை கூவினாள்.

சிந்தனை வெடுக்கென கலைந்து, சூழ நோக்கினேன்.

ஜன்னலுக்கு வெளியே ஆடும் வாழையிலையின் புச்சை மேல் சூரியன் விழுந்து இலை அப்படியே தங்கத் தகடாய் மாறுகையில்-இதுதான் பசும் பொன்னோ?

என்னுள்ளும் பொன்னொளி புகுந்தது. தரையில் இருகைகளையும் ஊன்றி மெதுவாய் எழுந் தேன். இத்தனைக்கும் நான் உடல் பருமனில்லை. ஆனால் ஏதோ அழுத்திற்று, அசதியுமில்லை; வயசு? அல்லது, என்னில் இடம் கண்டுகொண்டே ஒளிக்கதிரின் பசும் பொற்கனமோ?

திடீரெனச் சமையலறையில் இரைச்சலும் பேச்சும் அடங்கிப்போச்சு என்ன ஆச்சு? என்னைச் சூழப்பார்க் கிறேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகக் கவனிக் கிறார்கள். எல்லோர் முகத்திலும் ஆச்சரியம். என்னையு மறியாமல் ஏதோ அசம்பாவிதமாயிருக்கிறேனோ?

பிறகுதான் உணர்கிறேன். மண்டையில் ஏதோ குலுகுலுப்பு. என் தலைமேல் ஏதோ உட்கார்ந்து கொண் டிருந்தது. நான் வாசற்படி தாண்டும்வரை தலை மேலேயே இருந்து, இடது தோளுக்குத்தாவிற்று, அங்கிருந்து என் முகத்துள் உற்றுப்பார்த்து விட்டு.

கட்விக் ட்விக்!!-பறந்தோடிவிட்டது. என் தலைச்சடையைக் கூடு என்று கொண்டு விட்டது.

போலும்!