பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 லா. ச. ராமாமிருதம்

நான் முன்கட்டுக்குச் செல்கையில், கண்ணன் என் காது பட நமக்கு இனி பன்னிரண்டு மணிவரைக் கவலை யில்லை. டேய் சேகர், விவித் பாரதி, Full Volume திருப்புடா!”

நரசிம்மன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறார். செகரேட்டேரியட்டில் வேலை. மூன்று மாதங்களுக்குமுன் மார்க்க பந்து மூலம் பரிச்சயமானார். சினிமா- நான் அந்தக் காலத்தில் பார்த்த படங்கள், கேட்ட குரல்கள் (தேவதாஸ் பருவா, ஸெய்கல், கண்ணன் பாலா) பாட்டுகள் (மானமெல்லாம்போன பின்னர் வாழ்வதுதான் ஒருவாழ்வா) அதில் ஆரம்பித்து, ஸங்கீதம், இலக்கியம், வேதாந்தம் பேசிக் கொண்டேயிருப்போம், நேரம் போவதே தெரியாது. நான் பேசிக் கொண்டேயிருப்பேன். அவர் கேட்டுக் கொண்டேயிருப்பர் நேரமாச்சு என்று தானாகச் சொல்லமாட்டார். நேரமாகிவிட்டதே என்று வற்புறுத்தினாலும் தங்கமாட்டார்.

'-வாசலிலேயே கா த் தி ன் டி ரு ப் பா , சாப்பிட மாட்டா.”

'ரெண்டுபேரும் வயசானவா. நான் ஒரே பிள்ளை, பெற்றதுக்குக் குறைவில்லை ஆனால் தக்கவில்லை. போயே ஆகணும்.”

காப்பிகூட அருந்தமாட்டார். 'இன்று ஏகாதசி. நான் மாத்வன் பாருங்கோ’

அல்லது, 'கொஞ்சம் ஹெவியாயிருக்கு, மன்னிச்சுடுங்கோ’

இதுபோல் ஏதோ. அது மரியாதையா? கூச்சமா? கொள்கையா?

ஏதோ ஒரு சாக்கு. எங்கள் முதல் சந்திப்பில், நான் கன்யாகுமரியை முதன்முதலாகத் தரிசித்தபோது என்னில் நேர்ந்த மன எழுச்சிகளை நான் விவரிக்கக் கேட்டு, அவர் அடுத்தடுத்து வரத் தலைப்பட்டு, எங்கள் பழக்கம் முதிர்ந்தது.