பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷{} லா ச. ராமாமிருதம்

அன்பும் ஒரு பூச்சுத்தான். அதன் உண்மையான தன்மை பொய். அம்மா சொன்னது சரி. யாரால்தான் யாருக்கு என்ன பிரயோசனம்? ஐயோ, தாயும் பிள்ளையும் அது என்ன ஈஷலோ; அப்பளாத்து மாவு மாதிரி! உலகத்தில் இல்லாத அம்மா, உலகத்திலில்லாத பிள்ளை!” என்று என் மனைவியின் கேலியும் சரி.

ஆசை, அன்பு, பாசம், நம்பிக்கை, சடங்கு, ஆசாரம் என்று மேலுக்கு மினுக்குக் காட்டி, உண்மையில் பயத்தை வளர்த்துத் தனக்கு வேலிகள் நட்டுக்கொண்டே சமூகத் தின் இனித்த பொய்களை உண்டு ஏமாறுவதைவிடக் கசந்த உண்மையை விழுங்கி விடமுண்ட கண்டனானால் என்ன? நஞ்சுக்குப் பழக்கிக்கொண்டால் நான் சிரஞ்சீவி.

★ சிற்சில சமயம் எனக்குச் செவி நரம்பு குறுகுறுக்கும் செவியென்று நான் சொல்கையில் என்மனத்தில் என் எண்ணம், வெளிச்செவிக்கும் உட்செவி தாண்டிய கட் செவிக்கும் உட்செவி, அங்குச் சிலந்தி நூலினும் இழை யெடுத்த ஸ்ன்னத்தில் எஃகுச் சுருள் ஒன்று திடீர் திடீர் என, எனக்குக் காரணம் தெரியாத சமயங்களில் சுழல் கையில், அந் நரம்பொலியில் சிரிப்பு கேட்கிறது எனக்கு மாத்திரம் கேட்டு என்னில் குடிகொண்ட ரகஸ்யச் சிரிப்பு? என்ன சிரிப்பு ? என்னையறியாமல் இது என்னுள் எப் போது வந்தது? இல்லை, எனக்கு முன்னாலேயே இருந்து என் தோலும் சதையும்- தான் அதன் மேல் புற்று மண் ணாய்ப் பூத்துக் கொண்டிருக்கிறதே? இச்சிரிப்புக்குச் செலவு உண்டோ இல்லையோ, வற்றல் இல்லை.

உயிர் அருவியின் கிளுகிளுப்பே, இதுதானோ?

ஆனைக்கா ஸ்ன்னதிபோல், நெஞ்சப்பாளங்களிலி ருந்து கசியும் கண்ணிரும் இதுதான் என்றும் தோன்று கிறது. ஏனெனில் நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால் குளிர்ந்த கோபம்தான் கண்ணிர் உறைந்த கண்ணிர்தான் சிரிப்பு.