பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் ?" 145

கண்ணன் : ('அறுவை !”)

ஆனால் தண்ணனுக்காக நாங்கள் தளர்ந்துவிட முடி யுமா என்ன ?

ஒரு சமயம் சேர்ந்தாப்போல் பத்து நாட்கள் ஆளைக் கானோம்.

எனக்குக் கொஞ்சம் கையொடிந்த மாதிரிதான் இருந் தது. என் சங்கடம் பையன்களுக்குக் குவி. அவர்களுக்குள் தோளுக்குத்தோள் இடித்துக் கொள்வதும், ரகள்:யமாய்க் கொக்கரித்துக் கொள்வதும்...

காய்த்ரீ கீச்சுக்குரலில், 'எப்போ வருவாரோ எந்தன் கலிதீர-’’.

ஆத்திரத்தில் அவளை ஒரு அறைகூட வைத்துவிட் டேன். பிறகுதான் தெரியவந்தது கேலியில்லை ; பள்ளிக் கூடப் பாட்டாம். ஒப்பிக்கணுமாம். கேட்கணுமா? அவளை மன்னிப்புக் கேட்காத குறை. சாக்லேட், அவித்த வேர்க்கடலை, சேப்பங் கிழங்கு ரோஸ்ட், மாட்டினி... மூன்று நாள் லஞ்சவிழா.

பிறகு திடீரென ஓரிரவுபடுக்கை கூட விரித்தாகி விட்டது. வாசற்கதவு தட் டல். திறந்தால், நரசிம்மன் நின்று கொண்டிருந்தான், கையில் பலகைபோல் எதையோ தாங்கிக் கொண்டு.

'ஸார் ஒரு நிமிஷம். மாமியையும் வந்து நிற்கச் சொல்லுங்கோ. கன்யாகுமரியிலிருந்து நேரே இங்கேதான் வரேன்-”என்று, அவர் கையிலிருந்த படத்தை அவள் கையில் கொடுத்துவிட்டு, சாஷ்டாங்கமாக இருவரையும் நமஸ்கரித்து விட்டு உடனே போய்விட்டார்.

'நல்ல பையன்” என்றாள், படத்தை எட்டப் பிடித்துக் கொண்டு (வெள்ளெழுத்து ஆனால் ஒப்புக் கொள்ளமாட்டாள்), ஏற இறங்க அதைக் கணித்தபடி. படத்திலிருந்து கன்யாகுமரி சிரிக்கிறான்.

த்வனி-10