பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

よ説望& லா. ச. ராமாமிருதம்

‘ட்வீக்'ட்வீக்'- மக்குமாந்தர்களா கேள்விகளைக் கேட்டுப் போட்டி போட்டுக் கொண்டிருங்கள். கேள்வி யில்லாமல் சந்தோஷமாயிருக்க வழி கேட்டவர்கள்!

என்னைச் சவளி செய்ததா? வேறா?

கேள்விகள் கேள்விகளைத்தான் விருத்தி செய் கின்றன. பாம்புக்குட்டிகள் மாதிரி. ஒன்றை அடித்த இடத்திலேயே ஒன்பது கிளைக்கும். விளைவு ஒன்பது பயம். இன்னும் எத்தனையோ?

பதிலும் பாம்புதான். ஆனால் தாய்ப்பாம்பு. எல்லாக் குட்டி.களையும் தன்னில் அடக்கிய தாய்ப்பாம்புக் கடி தான் விடுதலைக்கடி. சாவுக்கடி அல்ல. உள்ளத்தின் கதவைத் திறக்கும் சாவுக்கடி. ஆனால் அந்தக் கடிவேளை எப்போ வருமோ?

இதென்ன பேத்தல்? இன்று எனக்கு ஏன் இப்படி யெல்லாம் தோன்றுகிறது?

உருவம், அருவம், உருவகம் எல்லாம் புதுமாதிரிக் கலவையில் கோலம் பின்னிக் குழைகின்றது!

-'ஸார் இந்த உலகம், புவனமே கடவுளின் சிருஷ்டி. கடவுள், ஜீவசக்தி, ப்ரம்மம், பெயர் எதுவானாலும் சரி- ப்ரும்மம் ஏன் சிருஷ்டி பண்ணிக்கொண்டேயிருக் கிறது? சிருஷ்டியின் அவசியம்தான் என்ன? அது சுய நினைப்பில்லாமல் பொறுப்பற்றுச் செயல்படுகிறது என்று சொல்வதற்கில்லை. ஏ. .ெ ன ன ல் சிருஷ்டியில்-நடப்பு, அழிவு உள்படத்தான்- ஒரு லக்ஷணம், நியதி, கோர்வை எல்லாமே தெரிகின்றன. முரண்பாடு என்று நமக்குத் தோன்றுவதுகூட ஏதோ ஒரு முறை, கோட்பாடுக்குக் கட்டுப்பட்டுத்தானிருக்கின்றன. சிருஷ்டியினின்று அதன் ரசங்களை மனிதன் எவ்வளவோ பிடுங்கப் பிடுங்க இன்னும் பெருகிக் கொண்டேதான் போகின்றன. ஆனால் ஓயாமல் நடந்துக் கொண்டிருக்கும் இந்தச் சிருஷ்டித் தொழிலுக்கு ஒரு நிப்பாட்டம், தடுத்தல் நிறுத் த ல்