பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிப்பு 基礎5

ஆனால் அப்பா நீ கிரிக்கிறாய். உன் உடல் சிரிப்பில் குலுங்குகிறது.

உத்தரணியில் ஜலம் குலுங்குகிறது, ஆனால் ஒரு சொட்டுக்கூட சிந்தவில்லை,

உன் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்குகிறது, நீ தொண்டையை கனைத்துக்கொள்கிறாய். "அ-ஹெம்-உன் பேர் என்ன? அப்பா உனக்கு முகம் மறக்காது; சொல் மறக்காது. ஆனால் பெயர் மறந்து போகும் அல்லவா? "த்ரிபுர ஸாந்தரி.’’ - எனக்கு மயிர் கூச்செரிகிறது. என்னையுமறியாமல், என் பார்வை பூஜை பக்கம் திரும்புகிறது. அங்கு விக்ரஹம் இருக்கிறது. ஆ. நீ ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். யார் யாருக்கு வாரிசு வந்தாலும் உண்மையின் ரீதியில், அதில் பிரயோஜனம் இல்லை. அர்த்தமுமில்லை. ஏனெனில் அவரவர்காரியங்கள் அவரவருடையது. அவரவர் காரியங் களுக்கு அவரவர் பொறுப்பு. இல்லை காரியங்கூட முக்கிய மில்லை. அவன் உன்னை அழைத்தது தவறில்லை. நீ போனதும் தவறில்லை. இரண்டும் முக்கியம்கூட இல்லை. ஆனால் அப்புறம் உள்ளிருந்து வந்த குப்பைக்கூளம் எச்சில் எல்லாம் வார்த்தை என்று கொட்டினதுதான் தவறு. நாக்கைச் சுத்தமாய் வைத்துக்கொள்ளவேண்டும். அது வாக்கின் பீடம்.”

"அவரை மன்னியுங்கள்.” * ஸுந்தரி நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை"அப்பா நீ மன்னியைப் புரிந்துகொள். நீ அவளைக் கூட புரிந்துகொள்ள வேண்டாம். அவள் வந்தி ருக்கும் காரியத்தைப் புரிந்துகொள். அண்ணாவுக் காக மன்னி வந்திருக்கிறாள். நீ மன்னித்து விடு.