பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E 55 லா. ச. ராமாமிருதம்

அம்மா எப்பவோ மன்னித்துவிட்டாள். எனக்குத் தெரியும்; அம்மா நீ மன்னித்துவிட்டையோன்னோ? 'மன்னிப்பு என்பதே கிடையாது. மன்னிப்பு என்பது ஒரு புளுகு. அவரவர் காரியம் அவரவருடையதே என்றான பிறகு, யார் யாரை எதற்கு மன்னிக்கிறது? வாக்குப் பேசுகிறது.

அப்பா !

அப்பா !! அப்பா !!!

வாக்கு நடந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது இப்போது இல்லாவிட்டாலும் உனக்கு ஒரு நாள் புரியாமல் போகாது. எப்பவும், உள்ளிருப்பதுதான் வெளியே வரும். பின்னால் காரியமாய் நேரப்போவது தான் முன்னால் வாக்காய் வரும். யார் தடுத்தாலும், நான் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்ட தாலும் சொன்னது இல்லையென்று ஆகிவிடாது. சொன்னதுதான். வாக்கையோ, வாக்கன் பலிதத் தையோ தடுக்க நீ யார், நான் யார்? இதைப் புரிந்து கொண்டுவிட்டால் யாருக்கும் யார் மேலும் கோபம் வரக்காரணம் இல்லை. நியாயம் இல்லை. எனக்கு அவன்மேல் கோபம் இல்லை. 'லெக்சர் அடிக்க இந்தச் சான் n'க்கு எத்தனைநாள் அப்பா காத்திருந்தாய்? மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ என்று உனக்கு அக்கரையுண்டோ?

'அப்போது தப்பென்று நேர்ந்து விட்டால் அதற்கு, மன்னிப்பு என்பதே கிடையாதா?”

"என்ன ஸ் இந்தரி, நான் இவ்வளவு விளக்கியும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறாயே! இதற்கு மன்னிப்பு கிடையாது. இது விதிக்கப்பட்டது.”

‘'எது விதிக்கப்பட்டது?”