பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寰鲇 லா, ச. ராமாமிருதம்

அங்கு உன் பதவியின் சின்னம் கறுப்பு அங்கி. இங்கு பூஜை எனும் வேஷம் பூண்கிறாய்.

அடேயப்பா, என்ன ஆடம்பரம், என்ன படர் டோபம்! அம்பாள் தன்னை வளர்க்க உன்னை வெள்ளி விமானம் கேட்டாளா? உட்கார்ந்தால் தலை உயரத்துக்கு இரு பக்கங்களிலும் வெள்ளிக் குத்து விளக்குகள் கேட்டாளா? வெள்ளியில் அபிஷேகப் பாத்திரங்கள், ஆராதனை சாமான்கள், யானைத் தலை பெரிது வெள்ளிக் கிண்டி, தேங்கிய அகிற் புகை, பழனி விபூதி மணம், சாமரம், அமர்க்களம் தமுக்கடி.

உனக்கு செளகரியங்கள் இருக்கின்றன. காகதி நடத்து கிறாய். இல்லாதவன் என்ன செய்வான்? அவனுக்குத்தான் உன்னைவிடக் கடவுள் வேண்டியதிருக்கிறது.

ஆனால் நீ அம்பாளை வணங்கவில்லை.

நீ வழிபடும் தெய்வம் அதிகாரம். சூரபத்மம். . ராவேனசுவரம். ஆண்டவன் தலையில் கை வைக்கனும். உன் பூஜையில் இந்தத் தோரணை தான் எனக்குத் தெரிகிறது. நீ பூஜை மனியை ஆட்டுகையில், சேவகனை வரவழைக்க மேஜையின் மேல் Beit அடிப்பது போல் இருக்கிறது. .

நீ பூஜை செய்கையில் அம்பாள் உன்னெதிரில் சாகதிக் கூண்டில் நிற்கிறாள். அவள் மேல் நீ சுண்டும் குங்குமமும் மலர்களும் சாகசியத்தைப் பிய்த்தெறியும் கேள்விகள் போல் விழுகின்றன. நீ அவளைப் பயமுறுத்துகிறாய்.

என்னை யாரென்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்? யாருடைய சிபாரிகமில்லாமல், என் சொந்த முயற்சி யிலேயே உழைத்து முன்னுக்கு வந்தவன். வாகீசுவர சர்மா ஞாபகமிருக்கட்டும். இன்னுமா வரவில்லை? என்ன தைரியம்? என்கிற மாதிரி இருக்கிறது.