பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏蛤罗 லா. ச. ராமாமிருதம்

அமைத்த பந்தலில் அவரையோடு படர்ந்த புடலையின் காய்கள் பாம்புகள்போல் இருளில் தொங்குகின்றன. முழுக்க முழுக்க ஜலம். சத்தா மண்ணா ஒண்னு கிடை யாது. ஏன் தான் இதையும் ஒரு குறி என்று அம்மா பயி ராக்குகிறாளோ, பண்ணிப் போடுகிறாளோ ?

அப்பா ! என் மனமாற உங்களைத் திட்டி, நான் அறிந்தும் அறியாமலும் சேர்ந்து என்னுள் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் ஒய்ந்தபின், குளத்தில் குளிக்கையில் குத்தும் மீன்கள் போல், நெஞ்சடியில் ஏதோ நமு நமுவென்று பிடுங்குகிறது.

உங்களைப் புதுமுறையில் பார்க்கிறேன். என் வசைமாரியில், என் கண்ணழுக்குத்தான் கரைந் ததோ!

அல்லது உங்களைக் குளிப்பாட்டித்தான் காண் கிறோனோ, அறியேன்.

நீங்கள்வேஷங்களுக்கு எப்போது திரும்பினேள் ? "நீயும் வேஷம்." 'நீங்களும் வேஷம் என்றாலும்’ வேஷங்கள் இலாது முடியாது. எல்லாமே வேஷங்கள்தாம் என்று இப்போதுதான் அறிகிறேன். அப்பா, நீங்கள் ராஜா. "நீ'யில் மாறுவேடத்தில் ராஜா. 'நீங்களி"ல் சபையில் ராஜா. எப்படியும் நீங்கள் ராஜாத்தான். நான் திட்டினதால் நீங்கள் குறைந்துவிட வில்லை. உங்களை நான் குறைக்க முடியாது.