பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிப்பு 鲨荔

கம்பீரம் வளர்ந்துதான் இருக்கிறீர்கள். அதிகாரம் உங்கள் லக்ஷணம். நீங்கள் நெருப்பாயிருக்கையில் எரிக்கத்தான் எரிப்பீர்கள்.

தொட்டவன் சுட்டுக்கொண்டால், தொட்டவன் முட்டாள். நெருப்பின் தப்பா ?

உங்கள் நெருப்புத் தன்மையைத் தவறாய் நான் அதிகார மோகமெனக் கொண்டேன்.

என் ஆத்திரத்தில், உங்கள் பூஜையை ஆடம்பரம் எனப் படித்தேன்.

பிறர் .ெ ம ச் சச் செய்வதுதானே ஆடம்பரம், படாடோபம் !

பிறர் பற்றி எதிலும் உங்களுக்கு அக்கதையில்லை என்று எனக்குத் தெரியும் :

சில விஷயங்களில் நாங்களோ உங்களுக்குப் பிறர்தாம், யார் முதுகைச் சொரிந்தும் நீங்கள் முன்னுக்கு வரவில்லை.

நெருப்பாய் எரிந்தே அகலிலிருந்து அகண்டமாகி யிருக்கிறீகள்.

உங்களுக்குத் தூண்டுகோல் நீங்களே. அதற்குக்கூட நீங்கள் பிறரை நம்பியில்லை.

எல்லாமே உங்களுடையதே. என் இடுப்பைச் சுற்றிய வேட்டி, அதன் கிழிசலை ஒட்டித் தைக்கும் ஊசியும் நூலும் கட. இப்போது மாத்திரம் அல்ல. என் பாதங்களை நானே பூமியில் ஊன்றி எனக்கு இறக்கை முளைக்கும் வேளை வந்த பிறகும் அப்பவும் என் முயற்சியும் அதன் பலன்களும், உங்களால்தான்.