பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 லா. ச. ராமா மிருதம்

முதலில் நீங்கள் இலாது நானே ஏது ? நீங்கள்,

அம்பாளை வழிபடுகிறீர்களோ அதிகாரத்தை வழிபடுகிறீர்களோ யாரை வழிபட்டால் எனக்கென்ன ? யாரும் யாரையோ ? எதையோ குறித்து வழிபட்டு அவரவர்க்கு அவரவர் வழி. மற்றவை அனைததும் நல்லதோ பொல்லாததோ எனதல்லாதன எல்லாமே அயல் வீட்டு வம்புதான்.

அண்ணா எங்கேயாவது போய் வந்து அங்கே இப்படி இருந்தது இங்கே அப்படியிருந்தது என்று அளந்தால் நீங்கள் கடிiர்கள்; "நீ சாப்பிடப் போனாயா? எச்சிற் கலையை எண்ணப்போனாயா?’’

எனக்கு இப்போது புரிகிறது. மெளனமே ஒரு வழி நீங்கள் அதிகம் பேசுவதில்லை.

விளக்கம் கூட ஒரு வம்புதான். வழிக்கும் ஒரு வழியென உங்கள் வழிபாட்டில், குங்கு மம், மலர்கள். உட்கார்ந்தால் தலை உயரத்துக்கு இருபக்கங்களிலும் வெள்ளி வி ள க்கு க ள் , அபிஷேகப் பாத்திரங்கள் ஆராதனைச் சாமான்கள், யானை தலை பெரிது வெள்ளி கிண்டி, அகிற்புகை, சாமரம். குற்ற மென நான் ஏன் கொள்ள வேண்டும் ?

இல்லாதவனுக்கு முடியாதது இருப்பவனுக்கு முடிந் தால் தவறா?

எல்லோராலும் எல்லாமே முடியுமா !

முடிந்தவரை முடித்தது முடிந்தது.