பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O. ரா ஜ கு மா ரி

கிழல்கள் நீளத்தொடங்கி விட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய், வானத்தில் வண்ணங்கள் குமை கின்றன. கோணக்கிழக்கில், அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின் குறுக்கே பகதிகள் மூன்று. கோலப் புள்ளிகள் போலும் ஒரே அச்சில் பறக்கின்றன. அந்தரத்தில் கூடு கட்ட இடந்தேடுகின் றனவா? தொடுவானிற்கும் பூமிக்கும் பாலம் விழுந்த ஒளி துரலத்தின் குழல் வழி வர்ணங்கள் விதவிதமாய்ப் பெய்கின்றன, எதிலிருந்து எதில்? வானத்திலிருந்து பூமிக்கா, பூமியிலிருந்து வானிற்கா என்றுதான் புரிய வில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. சாயும் பொழுதில் தோயும் வண்ணக் குழைவில் முகில்களின் செழிப்புடன் பூமியின் பசுமையும் சேர்ந்து தீட்டியதாய், பிரம்மாண்ட மானதோர். ஒவியம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தென்றலின் அசைவில் திரைச்சீலை ஆடுகையிலேயே தீட்டிய வர்ணங்கள் காயுமுன்னரே.

இயற்கையின் ஆக்கல் சீற்றத்தில் புதுப்புது நிறங்கள் கக்கிக் கொண்டிருக்கையிலேயே இதோ, அப்பவே-இல்லை-இப்பவேஇல்லை-சமயத்திற்கு அதன் அமைதலின்றி நேரம் கணக்கேது?

-அடுத்த மாத்திரையின் மந்திரக்கோல் வீச்சில் ஒவியம் தேய்ந்து கொண்டே வருகிறது. எந்தச் சூழ்ச்சியால் இந்த வீழ்ச்சி’ மாலைக்கும் இரவுக்கும் ஏன் இந்த வீண் வியாஜ் ஜியம்? எனும் திகைப்பில் நெஞ்சில் சோகம் நூல் சிக்குகிறது.