பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகுமாரி 直部對

ஏதோ பீதிகூட பக்கத்துளரில் குதிரை வாகனம் பார்க்க

ஆசையா உடுத்திக்கொண்ட பட்டுப் புடவை. உற்சவத்தின் உச்சிக்கட்டத்தில் அத்தனை க்யாஸ் லைட் பட்பட் படபடா டப்டப் வாணவேடிக்கை கடைவீதித் திருவிழாக் கூட்டம் நடு அம்பலத்தில் - நெகிழ்ந்து, அடியோடு அவிழ்ந்து விட்டமாதிரி, மானம் தோற்பதற்கென்றே அலங்காரமா? ரூபமாய்க் கேள்வி வடியவில்லை ஆனால் அதன் கொக்கி

.ெ த ஞ் சி ல் மாட்டியிழுக்கின்றது. சதையடியில் முதுகெலும் பின் வெண்மையின் உள்மையத்தில் ஒரு "சில்" "சிறீல்”. அடிவயிற்றில் ஏதோ உறுத்தல், தவிப்பு; கிணற்றைச் சுற்றிச் சுற்றி வளைய வருகிறாள். குழந்தைகள் இன்னும் விளையாட்டிலிருந்து திரும்ப வில்லை. கிழவர் உலாவப் போய்விட்டார், மத்தியானத் திலிருந்தே அவரைக் காணோம். வீட்டில் அவள் தனி.

கிணற்றுள் எட்டிப் பார்க்கிறாள்.

யார் இந்த இளவரசி இவளுக்கு ஏன் இந்தப் பாதாளச்சிறை ஊமைக் கிலேசம் பல்படாது மார் பைக் கல்வுகிறது? இருகைகளாலும் மார்பை அழுத்திக் கோள்கிறாள்.

உள்ளே கிணற்றடியில் கண்ணாடி,

எனக்கென்ன குறைச்சல்? வெட்கம், இன்பம், பரபரப்பு அங்கங்களைப் பறிக்கின்றன. கண்ணாடியின் வட்ட்விளிம்பிலிருந்து ஜலதாரைகள் சுரந்தவண்ணமா யிருக்கின்றன.

ராஜகுமாரி ஏன் ஸ்தாஸ்னானம்?

வெட்கம், இன்பம், பரபரப்பு அங்கங்களைப் பறிக் கின்றன.