பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重70 லா, ச. ராமாமிருதம்

(தண்ணியா அது? அமிழ்தமல்ல!”)

(காத்தான்.)

இங்கிருந்து பார்க்கையில் ஜலத்தில் இளநீர்போல இளவெண்மை.

("கத்திரி .ெ வ ய் யி லி ல் கூட ஆழம் தென்னை மரத்துக்குக் குறைவில்லை. கவுறு விட்டுப்பார்த்துக் கண் கண்ட உண்மை")

(காத்தான்.)

இதுக்கும் ஒரு கதை இருக்குதம்மா என்வூட்டிலே வழங்கற கதை, என் முப்பாட்டன் சொன்ன கதை, உனக்கு நான் சொல்லப்போற கதை.

இந்த ஊருக்கும் வந்ததாம் அந்த நாள் ஒரு பஞ்சம். வாய்க்கால், குளம்,கிணறு நாக்கிலே எச்சில் கூட வறண்டு போய் அப்படி ஒரு காய்ச்சல். பயிரும் ஊரும் மானம் பார்த்துப் பார்த்து, கொடும்பாவி கட்டியிழுத்தும் நட்சத்திரம் உதிருது. மானம் இறங்கி ஒரு கண்ணிர் கூட சொட்டல்லே. ஊரைவிட்டு ஒடலாமா, ஒருத்தரை யொருத்தர் அடிச்சுத்தின்னலாமான்னு மக்களுக்கு ஆத்திரம். யார்மேலே எப்படி ஆத்திக்கலாம்னு வயுறு வெந்துகிட்டிருந்த சமயம் ஒரு நாள் போது சாஞ்சு போச்சு. இந்தவூட்டு யசமானி வாசல்லே வந்து நிக்கறாங்க. யாரோ ஒரு பொம்புளையெ பத்து ஆம்புளேங்க துரத்தி வ ர | ங் க. அவிழ்ந்துபோன சேலையைக் கையாலே வவுத்துலே அள்ளிப் புடிச்சுட்டு அலங்கோலமா ஓடிவரா. பின்னாலே சின்னதும் பெரிசுமா கல்மாரி வீசி வருது; "ஐயோ இடம் கொடுங்கோ! என்னைக் காப்பாத்துங்கோளேன்!' அந்தப் பொம் மனாட்டி அலறிட்டேவரா, அந்தந்த வீட்டுத் தாய்மார், தங்கைமார், மாமியாரா, மருமவளா எல்லோரும் பெண் பிள்ளைங்கே வேடிக்கை பாக்றாங்க; பெண் பாவம் பாக்கறவங்க யாருமில்லே.