பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 லா. ச. ராமாமிருதம்

வந்தவளுக்குக் கண் அலைச்சல் நிக்கல்லே. அம்மா சொன்னதைக் காதில் வாங்கிட்டு. ஆனால் ஏதோ நினைப்பா;

"எல்லோரும் செய்யறதைச் செஞ்சுண்டே இருக் கிறதைவிட புதுசாவோ ஈனமாவோ ஒண்னும் நான் பண்ணிடல்லே.” அம்மாவுக்குப் புரிஞ்சு போச்சு. கண்ணுலே தண்ணி தளும்பிட்டுது.

'அடப்பாவமே ஏண்டி குழந்தை வயத்துக்கில்லாத கொடுமையா?” - -

'ஏன் பாட்டி, நானே வழங்கறவளாயுமிருக்கக் கூடாதா?” -

நீ சொல்றது புரியல்லியே! காரியம் ஒண்ணொண் ணுக்கும் வேளைப் பொழுதுன்னு ஒண்னு இருக்கே?"

நீங்கள் சொல்றது என்னிடம் வருவோருக்குத்தான் இருக்கனும் எனக்குக் கிடையாது. ஒடற தண்ணிர் ஓடிண்டே இருக்கு என்னிடம் இருப்பது என் ஆழம் ஒண்ணுதான். அதுவும் எவ்வளவுன்னு எனக்கே. தெரியாது. அதுவும் எனக்கு ஒளிவு மறைவில்லை.”

"என்ன டிம்மா சொல்றே, புரியல்லியே!”

'இதோ பாருங்க பாட்டி. நானே வலியப்போய் யாரையும் கையைப் பிடிச்சு இழுக்கல்லே. ஆனால் தேடிண்டு வந்தவாளை மாட்டேன்னு' மறுக்கல்லே. 'ஆபா'ன்னு தலையையும் ஆட்டல்லே. நீங்கள் எனக்கு இப்போ அடைக்கலம் தந்து அணைச்சுக்கலியா, அது மாதிரி ஆதரவா அனைச்சுண்டேனோ என்னவோ! ஏன் பாட்டி, நெஞ்சடியில் நாம் அத்தனை பேரும் தாய்மார் தானே! நம் உடலமைப்பும் அப்படித்தானே! மேடும் பள்ளமுமா ஒடி னாலும் மாரெல்லாம் பால்தானே.” பாட்டிக்குத்தலை "கிர்ர்ர்-'

அடிச்சுட்டு வர வெள்ளத்திலே வீட்டுக்கூரை குமுங் கினாப்போலே தாண் மேலே சாஞ்சு, சரிஞ்சு அப்படியே