பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகுமாரி 17.3

குந்திட்டாங்க. தண்ணியிலே கரைஞ்சு போறாப் போல. கூடம், தூண், சுவர் எதிரே அந்தப் பொம்புள்ளே, தான் எல்லாமே வரப்புக் கலைஞ்சு மிதப்பலாடுது. எங்கிருந்தோ ஒரு குரல் காதண்டை ஒலிக்கிறது.

'எதையுமே அக்கலக்கா பிரிச்சுக் கேட்டால், சொல்ற துக்கு ஒண்ணுமே இல்லை. இல்லை எனக்குச் சொல்லத் தெரியல்லே. எதையுமே அக்கலக்கா'பிரிச்சுப் பார்த்தால் செய்யாத பாபமில்லை. நேராத புண்ணியமில்லை. ஆழத்துக்கு ஆழம் பார்த்து ஆகற காரியமில்லை, இடுப்பளவு ஆழக்காரனை குளிப்பாட்டறேன். கழுத் தளவு வந்தவன் என்னில் முழுகி எழுந்திருக்கிறான். ஆழந்தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளேயே வந்து விட் டவன் என் வயிற்றில் துரங்கறான். காலை நனைக்கவே பயப்பட றவன். அ. மு. க் கு அவனிடமே பத்ரமா இருக்கு சமுத்திரத்தையே முழங்காலுக்குக் கண்டவன். பாதம் கழுவுவது தவிர நான் ஒண்னும் செய்ய முடியாது. துணிஞ்சவாள்தான் துறந்தவாள். துறந்தவாளுக்குத்தான் தரிசனம். .ெ க ஞ் ச ேந ரம் தப்பியோ, வழு தடைபட்டோ வந்தாலோ குழந்தை களுக்குத் தாங்கல்லே நானும் ஒடோடித்தான் வரேன். ஆனால் என் குழந்தைகளே என்மேல் கல்லைவிட்டு எறியறதுகள. தாயை அடையாளம் தெரிஞ்சுக்கல்லே. இதைவிட துக்கம் எனக்கு வேனுமா ? ஆனால் இதைவிட வேடிக்கை உலகத்தில் உண்டா ? எதுவுமே என்னைப் புரிஞ்சுக்கல்லே. புரிஞ்சுக்கறதுன்னா என்ன ? வந்ததை வந்தபடி வாங்கிக்கறது தான் எனக்குத்தெரிஞ்சுண்ட வரை புரிஞ்சுண்டதற்கு அர்த்தம். ஆனால் இதைப் புரிஞ்சுக்க அனுபவத்துக்கு ஒண்னு உன்மாதிரி வயதாகி யிருக்கணும்; இல்லை என்மாதிரி வயதை மீறியிருக்கணும். ஆனால் ஒண்னு உலகத்திலே (குழந்தைகளில்லாமல்) எல்லோருமே கிழமாயிருந்துட்டா எல்லாத்தையும் புரிஞ் சுண்டுதான் என்ன பண்றது ? அனுபவிக்க முடியாத