பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 13

முன்னாலேயே இருந்து கொண்டிருக்கும் சிரிப்பு. தனக்கே சிரித்துக்கொண்ட சிரிப்பு. அதன் காரணம் அதற்குத்தான் தெரியும். ஆனால் அதில் ஏதோ ஒரு வெறி, குரூரம், சிரிப்பின் உருட்டு ஒவ்வொன்றும் ஒரு முள் சக்கரமாய்த் தெரிந்தது.

நான் அடியெடுத்து வைக்க ஆரம்பித்ததுமே, கும்பலில் தானே ஒரு சந்து பிரிந்தது. நான் சாவதானமாய் அதன் வழி நடந்து வெளியேறி, தெருவைத் தாண்டினேன்.

என்னை யாரும் பின் தொடரவில்லை.

என் சிரிப்புப் பற்றி ஒரோரு சமயமும் எனக்குப் புதிது .புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள் தான் எத்தனை !”

ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதினின்று உதிர்கின்றன.

இன்னொரு சமயம் நட்டுவாக்காளிகளும் குளவிகளு மாய்க் குதிக்கின்றன.

ஒரு சமயம் பொன் வண்டின் ரக்கையடிப்பு. ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி, ஒரு சமயம் கண்ணிர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கினி

கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்.

அடித்த பஞ்சாகிப் பிறகு அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடரியின் கூர்முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள் கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.