பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகுமாரி 至亨蕊

மாறாத தூக்கத்தில் பாட்டியம்மா காணாததைக் கண்ட மாதிரிச் சிரிச்ச முவத்தோடு பாட்டியம்மா தண்ணியிலே கிடந்தாங்க, இத்தனைக்கும் வாய்க்கால்வழி பூரா தண்ணி கனுக்காலுக்கு ஏறல்லே. அதுதான் ஆச்சர்யம். பாட்டி யம்மா இடுப்பிலே, வந்த பொம்புள்ளே அவிழ்த்துப் போட்ட புடவையை உடுத்திட்டுருந்தாங்க. ரெம்ப நாளைக்கு அந்தப்புடவையைப் பூவாடையைக்கும்பிட்டி ருந்தாங்களாம். அப்புறம் ஒரு நாள் நனைச்சுக்கோடிக்குக் கோடி தோட்டத்திலே கிளைக்குக் கிளை கட்டியிருந்த சேலை எப்படியோ அவிழ்ந்து காற்றாடியாப்பறந்து போயிட்டுதாம். நீலப்பட்டுப் புடவை இயக்கை யடிச்சு ஊர்மேலே பறந்து போறப்போ தெருவிலே ஒடிவந்து வேடிக்கை பார்த்தவர் எத்தனை பேர். நடுவாசலில் குத்து விளக்கை ஏற்றி வெச்சு கற்பூரம் கொளுத்தி விழுந்து கும்பிட்டவங்க எத்தனை பேர். 'காவேரியாத்தா எங்கள் பாவம் பாராமல் எங்களை கண் திறந்து பார்த்தவளே! நீ வந்த காரியம் முடிஞ்சுது நீ திரும்பிப்போற விடமெல் லாம் உன் புண்ணியம் எங்களுக்கு இடிக்கட்டும்!!

அதனாலே காவேரியம்மன் வலிய வந்து தன்னைக் காட்டிக் கொடுத்துக்கிட்ட வீடு அப்பா இது"ன்னு முடிச்சுட்டு என் முப்பாட்டன் கூடவே என் பாட்டனிடம் சொல்லுமாம். இது என் பாட்டனிடம் நான் கேட்ட கதை. இதன் நிசமும் பொய்யும் நோண்ட உனக்கு நான் அதை சொல்லல்லே. நிசமும் பொய்யும் நமக்கேன்? நம்பினால் காவேரியாத்தா. நம்பாட்டி நல்ல கதை. இந்த வீட்டில் தண்ணி மொண்ட தம்வீடு நிறைஞ்ச வீடு இது நிசம். இதுக்குப் பஞ்சாயத்து வேணாமில்லையா?”

தலைமீது மிருதுவாய் ஏதோ உ தி ர் ந் த ைத கையிலெடுத்துப் பார்த்தால் பூ. அவளுக்கு மயிர் கூடச் செறிகிறது. காற்றுவாக்கில் இயங்கம் எந்த ஆத்மாவின் ஆசிர்வாதமோ? ஒரு வேளை கரிவேரியம்மனே தான் பூவை: அட்சதையாப் போட்டாளோ? -