பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟?6 லா. ச. ராமாமிருதம்

நிறையப் பெருகி நன்னாயிரு.”

இந்த அர்த்தம் தந்த இன்பம் நெஞ்சிலே தேன் விடுகையிலேயே.

ஆவிர்ப்பவி'

-முன்பின் சுவடுகூட அவள் கண்டிரா ஒரு நாமம் அதன் மோன் ஒசையிலேயேபுரியாத அர்த்த தாரைகளைப் பெருக்கிக்கொண்டு மனத்தில் தோன்றியதும், அமுதம் அவளை ஆட்கொண்டது. -

சஹ விஸ்

ஹவிர்ப்பாகம்

ஹவிர்ப் பாஹீ

ஆவிர்ப்பவி”

ஒரு தினுசான மூர்ச்சையில் ஆழ்ந்தாள்.

இருள் பந்துகள் செடிகளில், கிளைகளில், இலைக் சொத்துகளில் தொங்குகின்றன. எத்தனை நேரமாவோ அறியேன். இங்கேயே இருக்கேன். இருட்டு எப்போ இறங்கித்து? இன்னும் சுருள் சுருளாய் கடைசல்கள் மிதந்து வந்து கிணற்றின் மேல், ராட்டினக்கட்டைமேல், பிடிச்சுவரில் கொல்லைக் காம்பவுண்டின் பொக்கை, போறைகளில் கரை தோய்கின்றன. ஒளிப்பொறிகள் சுவரோரம் வாடாமல்லிப் புதரில் தோய்கிற கல்வின் பக்கமாய் சாய்ந்த வாழைக் குலையைச் சுற்றிச் சுடர் விடுகின்றன. தன் பக்கமாய் பறந்து வந்த மின்மினி ஒன்றைப் பிடித்தும், லேசாய் மூடிய கையுள் விரல் சிந்துகளின் வழி, உள்ளங்கைக்குழிவு தகதகக்கின்றது. கை விரித்ததும் கழன்றது என் ஜீவனின் பொறியா? என்னைச் சுற்றிச் சுழிக்கும் இருளில் பொரியும் இத்தனை பொறி களும் அத்தனை உயிர்களா ? இதுகளுக்கு ஏன் இவ்வளவு பெரிய தவிப்பு விடுபடுவானேன்? திரும்பவும் இருப்புத் தேடிதிக்குத் தவிப்பானேன்? இது ஒரு வேடிக்கையா என்ன ?